ஜேர்மன் கிளப்பில் தொடர்ந்து கெத்து காட்டும் இங்கிலாந்து கேப்டன்! தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்
பாயர்ன் முனிச் அணியில் இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் தூணாக உயர்ந்துள்ளார்.
பாயர்ன் முனிச்சில் சாதனை
இங்கிலாந்து அணியின் கேப்டனான ஹரி கேன் 14 ஆண்டுகளாக டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் அணியில் விளையாடி வந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜேர்மனியின் கிளப் அணியான பாயர்ன் முனிச் அணியில் சமீபத்தில் இணைந்தார். அணியில் இணைந்ததில் இருந்து ஹரி கேன் மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.
பாயர்ன் அணிக்காக விளையாடியுள்ள 6 போட்டிகளில் 8 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் ஹரி கேன்.
கொண்டாடும் ரசிகர்கள்
இதன்மூலம் பாயர்ன் முனிச் ரசிகர்களின் பேராதவராவை ஹரி கேன் பெற்றுள்ளார். நேற்று நடந்த லெப்ஜிக் அணிக்கு எதிரான போட்டியில் ஹரி கேன் பெனால்டி வாய்ப்பில் அசத்தலாக கோல் அடித்தார்.
எனினும் இந்தப் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. பாயர்ன் அணி பண்டஸ்லிகா தொடரின் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
Break-Up ஆனதால் பிரெஞ்சு கிளப் வீரர் தற்கொலை முயற்சி! பாலத்தின் மீது ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
இங்கிலாந்து அணிக்காக 59 கோல்கள் அடித்துள்ள ஹரி கேன், டோட்டன்ஹாம் அணிக்காக 213 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |