நீண்டகால சாபம் தீர்ந்தது! முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீரர்..மகுடம் சூடிய Bayern Munich
பாயர்ன் முனிச் அணி சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், இங்கிலாந்தின் ஹாரி கேன் தனது முதல் டிராபியை கைப்பற்றினார்.
சாம்பியன்
பண்டஸ்லிகா கால்பந்து போட்டியில் பாயர்ன் முனிச் மற்றும் ஆர்பி லேப்ஜிக் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
எனினும் புள்ளிகள் கணக்கில் பாயர்ன் முனிச் (Bayern Munich) சாம்பியன் ஆனது. இது பாயர்ன் அணிக்கு 33வது மற்றும் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லருக்கு (Thomas Muller) 13வது பண்டஸ்லிகா சாம்பியன் பட்டம் ஆகும்.
ஆனால், இங்கிலாந்தின் கால்பந்து தேசிய அணித்தலைவர் ஹாரி கேனுக்கு இதுதான் முதல் சாம்பியன் பட்டம்.
2010 முதல் 2023 வரை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் அணிக்காக, 317 போட்டிகளில் விளையாடிய ஹாரி கேனால் ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்று தரமுடியவில்லை.
முதல் பட்டத்தை சூட்டிய ஹாரி
பாயர்ன் முனிச் அணியில் நுழைந்தது முதல் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பல போட்டிகளில் அணியை வெற்றி பெற வைத்தார் ஹாரி கேன்.
அவரது அபார செயல்திறனின் இறுதியாக, பாயர்ன் அணியுடன் தனது முதல் பட்டத்தை சூட்டியுள்ளார். இதன்மூலம் பட்டம் பெற முடியாத தனது நீண்டகால சாபத்திற்கு ஹாரி முற்றுப்புள்ளி வைத்தார்.
டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் அணியில் இருந்து 100 மில்லியன் யூரோக்கள் மதிப்புடன் பாயர்ன் முனிச் அணிக்கு மாறிய ஹாரி கேன், அந்த அணிக்காக 24 கோல்கள் அடித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |