பிரித்தானியா வரும் குட்டி இளவரசர்கள்... இவர்களை சந்திக்கமாட்டார்களாம்
பிரித்தானிய இளவரசர் ஹரி தன் குடும்பத்துடன் அடுத்த மாதம் பிரித்தானியா வரும் நிலையில், அவரது பிள்ளைகள், இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகளை சந்திக்கமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா வரும் குட்டி இளவரசர்கள்...
ராஜ குடும்பத்தையும் பிரித்தானியாவையும் விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியமர்ந்துள்ள இளவரசர் ஹரி, தன் மனைவியான மேகன், பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டுடன் அடுத்த மாதம் பிரித்தானியா வர இருக்கிறார்.

ஹரியின் பிள்ளைகளை மன்னர் சார்லஸ் சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோர் தங்கள் சித்தப்பா பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்திக்கமாட்டார்களாம்.

அதாவது, வில்லியம் குடும்பம் கோடையின்போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான திட்டங்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டனவாம்.
ஆகவேதான், இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகளான ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோர், ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்திக்கமாட்டார்கள் என ராஜ குடும்ப விமர்சகரான அமன்டா மற்றா தெரிவித்துள்ளார்.
இன்னொரு விடயம் என்னவென்றால், பிள்ளைகள் ஒருவரையொருவர் சந்திக்கத் தயாராக இருந்தாலும், அவர்கள் பெற்றோர்கள் ஒருவரையொருவர் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டுமே!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |