பொறுமையிழந்த இளவரசர் ஹரி! படுக்கையறையை கூட புகைப்படம் எடுப்பீர்களா என கடுங்கோபம்
இளவரசர் ஹரி பொறுமையிழந்த தருணங்கள்.
பொதுவெளியில் பல்வேறு தருணங்களில் ஏற்பட்ட சம்பவங்கள்.
பிரித்தானிய அரச குடும்பம் பெரும்பாலும் கண்ணியமான நபர்களாகவும், ஊடகம் மற்றும் பொதுவெளியில் எப்போது சிரித்தபடி அமைதியாக இருப்பவர்களாகவே தெரிவார்கள்.
எவ்வாறாயினும், எல்லா சாதாரண மனிதர்களை போலவும் அவர்களும் பொதுவெளியில் தங்கள் கோபத்தை காட்டிய தருணங்கள் உண்டு. அதிலும் இளவரசர் ஹரிக்கு அது பல தடவை நடந்துள்ளது.
பிப்ரவரி 2019
2019 பிப்ரவரி மாதத்தில் மொராகோவில் ஹரி - மேகன் தம்பதி சுற்றுப்பயணம் செய்த போது ஹரி தனது பொறுமையை இழக்கும் ஒரு சூழல் ஏற்பட்டது.
அப்போது ஹரி உள்ளூர் பாரம்பரிய உணவுகளை ருசித்து கொண்டிருந்தார், அந்த சமயத்தில் தற்செயலாக ஹரி அங்கிருந்த ஒரு உபகரணத்தால் குழந்தையை தட்டிவிட்டார், இதை கேமராமேன் படம்பிடிக்க முயன்ற போது கோபப்பட்ட ஹரி அதை செய்யாதே என கூறினார்.
Getty images
மே 2019
இத்தாலியில் நடைபெற்ற போலோ விளையாட்டு போட்டிகளை காண ஹரி சென்ற போது நடந்த சம்பவம் அது. அவரின் நண்பரும் போலோ வீரருமான நச்சோ கூறுகையில், அங்குள்ள ஹொட்டலில் நாங்கள் தங்கிய போது ஊழியர் ஒருவரிடம் ஹரி இவ்வாறு பேசினார்.
எனக்கு காபி கிடைத்தது, காபியை சுற்றி பிளாஸ்டிக் பொருள் இருப்பதைப் பார்த்தேன். இதோடு என் சட்டையை ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் வைத்து எடுத்து வந்தீர்கள். தயவுசெய்து பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என கோபப்பட்டார் ப்ளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுசூழலை பாதுகாப்பது ஹரியின் எண்ணம் என கூறினார்.
Getty images
மே 2019
ஹரி - மேகனின் £2.5 மில்லியன் மதிப்புள்ள Cotswolds வீட்டை ஹெலிகாப்டரில் வந்து 2019 ஜனவரியில் சிலர் புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படங்கள் பத்திரிக்கையில் வந்தன. இதையடுத்து அந்த புகைப்பட ஏஜென்சி மீது ஹரி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து அந்நிறுவனம் மன்னிப்பு கேட்டது, இந்த சம்பவம் தொடர்பாக ஹரியின் சார்பாக பேசிய அவரின் வழக்கறிஞர், புகைப்படக் கலைஞர்கள் அணுகக்கூடிய இடத்தில் இருந்து விலகி, தனியார் விவசாய நிலத்தால் சூழப்பட்ட ஒரு ஒதுக்குப்புறப் பகுதியில் அந்த வீட்டை தேர்வு செய்தார் ஹரி.
ஆனால் ஹெலிகாப்டர் வீட்டின் மீது குறைந்த உயரத்தில் பறந்தது, வீட்டின் உள்ள் சாப்பிடும் அறை மற்றும் நேரடியாக படுக்கையறைக்குள் புகைப்படம் எடுத்தது. இது ஹரி, மேகனின் பாதுகாப்புக்கு பயத்தை ஏற்படுத்தி அங்கு வாழ முடியாத நிலையை ஏற்படுத்தியது என கூறியிருந்தார்.
Getty images