இளவரசர் ஹரி மேகனின் பட்டங்கள் பறிக்கப்பட்டபோது இவருக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்: ஹரி மேகன் ரசிகர்கள் கோபம்
ராஜ குடும்ப பொறுப்புகளை துறந்து வெளியேறிய இளவரசர் ஹரி மேகனின் பட்டங்கள் பறிக்கப்பட்ட நிலையில், இளவரசர் மைக்கேலின் பட்டம் பறிக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி, ஹரி மேகனின் ரசிகர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த மைக்கேல் என்பவர் மகாராணியாரின் உறவினராவார். தான் ஒரு ராஜ குடும்பத்தினர் என்பதை தன் சுய லாபத்துக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலும், அவரது பட்டமோ, மாளிகையிலுள்ள அவரது வீடோ பறிக்கப்படவில்லை.
இதனால், ஹரி மேகனின் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள். Roberta Fiorito மற்றும் Rachel Bowie என்னும் இரண்டு ரசிகர்கள் கூறும்போது, இது மிகவும் மோசம், இளவரசர் மைக்கேல் மீது தவறு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதற்கு முன் இதேபோல் குற்றம் சாட்டப்பட்டவர்களைபோல் மைக்கேல் நடத்தப்படவில்லை.
ராஜ குடும்ப பொறுப்புகளை துறந்து பிரித்தானியாவை விட்டு வெளியேறியதற்காக ஹரி மேகனின் பட்டங்கள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இளவரசர் மைக்கேலின் பட்டம் பறிக்கப்படாதது ஏன் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.