இளவரசர் வில்லியம் கேட்டுடன் ரகசியமாக பேசிய ஹரி மேகன்... வெளியான தகவல்
பிரித்தானிய இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் நேற்று தங்கள் 10ஆவது திருமண நாளைக் கொண்டாடிய நிலையில், நாடே மகிழ்ச்சியில் திளைத்தது.
எந்த ஊடகத்தைப் பார்த்தாலும், வில்லியம் கேட் குடும்பத்தினரின் படங்கள்தான். ஆனால், இளவரசர் வில்லியமுடைய தம்பியாகிய ஹரியும் அவர் மனைவி மேகனும் மட்டும், வில்லியம் கேட் தம்பதியரை வாழ்த்தியதாக தெரியவில்லை.
இந்நிலையில், தற்போது, அவர்கள் இருவரும் வில்லியம் கேட் தம்பதியருக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை, ஹரி மேகனின் செய்தித் தொடர்பாளரான கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த செய்தியில் என்ன சொல்லப்பட்டிருந்தது என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
இதற்கிடையில், ஓபரா பேட்டியால் சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவு இன்னமும் சரியாகாத நிலையில், வில்லியம் கேட்டின் திருமண நாளில் வாழ்த்துச் சொல்வதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, அவர்களுடன் சமாதானமாக ஹரியும் மேகனும் முயற்சி செய்யும் ஒரு வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.