64 வருட பாரம்பரியத்தை மீறி பிள்ளைகளின் பெயரை மாற்றிய ஹரி மேகன் தம்பதி
பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும், 64 வருட ராஜ குடும்ப பாரம்பரியத்தை மீறி தங்கள் பிள்ளைகளின் பெயர்களில் மாற்றம் செய்துள்ளார்கள்.

64 வருட பாரம்பரியத்தை மீறிய ஹரி மேகன் தம்பதி
இளவரசர் ஹரியும் மேகனும் sussex.com என்னும் புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளதை சிலர் அறிந்திருக்கலாம். அந்த இணையதளத்தில், ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகளுடைய பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

குட்டி இளவரசர்கள் ஆர்ச்சியும் லிலிபெட்டும், மௌண்ட்பேட்டன் விண்ட்சர் என்னும் துணைப்பெயருடன் பெயரிடப்பட்டார்கள். அதாவது, ஆர்ச்சி ஹாரிஸன் மௌண்ட்பேட்டன் விண்ட்சர் என்பது ஆர்ச்சியின் முழுப்பெயராகும். லிலிபெட்டின் முழுப்பெயர், லிலிபெட் டயானா மௌண்ட்பேட்டன் விண்ட்சர் என்பதாகும்.
ஆனால், இப்போது ஹரியும் மேகனும், தங்கள் பிள்ளைகளின் பெயரை ஆர்ச்சி சசெக்ஸ், லிலிபெட் சசெக்ஸ் என மாற்றியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், 1960ஆம் ஆண்டு, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் அரசவை ஆலோசகர்கள், மகாராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியரின் பரம்பரையில் வருவோருக்கு, மௌண்ட்பேட்டன் விண்ட்சர் என்னும் துணைப்பெயர் வழங்கப்படவேண்டும் என முடிவுசெய்தார்கள்.
ஆனால், 64 வருட பாரம்பரியத்தை மீறி, ஹரி மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளின் பெயரின் பினாலிருக்கும் துணைப்பெயரான மௌண்ட்பேட்டன் விண்ட்சர் என்பதை சசெக்ஸ் என மாற்றிவிட்டார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |