இளவரசர் ஹரி மீண்டும் அமெரிக்கா திரும்பலாம்: நட்பு வட்டாரம் பரபரப்பு தகவல்
Harry and Meghan could return to US within a few weeks: இளவரசர் ஹரி தன் குடும்பத்துடன் இன்னும் சில வாரங்களில் அமெரிக்கா திரும்பக்கூடும் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜ குடும்பத்திலிருந்தும், பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறி ஆறு ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த நிலையில், பிரித்தானிய மன்னரின் இளைய மகனான ஹரி, தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்.

ஆனால், அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பலாம் என அவரது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சில தெரிவித்துள்ளார்கள்.
இளவரசர் ஹரி மீண்டும் அமெரிக்கா திரும்பலாம்
அதாவது, ஹரியும் மேகனும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகிவிட்டதால், அவர்களுக்கு அரசு தரப்பில் வழங்கப்படும் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகள் பிரித்தானியாவில் தங்குவதற்காக வராமல், இங்கேயே வாழ வந்துள்ளதால், அவர்களுடைய பாதுகாப்பு குறித்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
ஆகவே, ராஜ குடும்ப மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் அமைப்பான The Royal and VIP Executive Committee (RAVEC) என்னும் அமைப்பு, சமீபத்தில் கூடி, ஹரி குடும்பத்தின் பாதுகாப்பு தொடர்பில் விவாதித்துள்ளது.

ஆக, அந்த அமைப்பின் முடிவு விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஹரி குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லையென்றால், ஹரி தன் குடும்பத்துடன் மீண்டும் அமெரிக்க திரும்ப உள்ளதாக அவரது நட்பு வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.
அதுவும், சில வாரங்களுக்குள்ளேயே, அவர்கள் அமெரிக்கா திரும்பலாம் என்றும், பிரித்தானியாவில் வாழ்வதைவிட அமெரிக்காவில் வாழ்வது பாதுகாப்பானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், ஹரி, மேகன் தம்பதியரின் பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டு இரண்டே நாட்கள் ஆன நிலையில், பாதுகாப்பு கருதி, இரண்டு பிள்ளைகளும் மீண்டும் வேறொரு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.