மன்னர் சார்லஸ்... பதுங்கும் ஹரி- மேகன் தம்பதி: உண்மை பின்னணி அம்பலம்
தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியமுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க இளவரசர் ஹரி திட்டம்
மன்னர் சார்லஸ் என்பதால், ராஜகுடும்பத்தை விமர்சிக்க தயங்குவதாகவும், பதுங்குவதாகவும் கூறப்படுகிறது.
பிரித்தானிய ராஜகுடும்பத்துடன் இணைந்து செயல்பட இளவரசர் ஹரி- மேகன் தம்பதி ரகசியமாக திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய தங்களின் நினைவுக் குறிப்புகள் மற்றும் நெட்ஃபிக்ஸ் தொடர் ஆகிய இரண்டும் வெளியான பின்னரே தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியமுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
@getty
மேலும், நெட்ஃபிக்ஸ் தொடர் மற்றும் நினைவுக் குறிப்புகளில் ராஜகுடும்பம் மற்றும் ராணியார் குறித்து கடுமையாக எதையும் குறிப்பிடாமல் வெளியிடவும் ஹரி- மேகன் தம்பதி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணியார் உயிருடன் இருந்த போது ஹரி- மேகன் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது மன்னர் சார்லஸ் என்பதால், ஹரி- மேகன் தம்பதி ராஜகுடும்பத்தை விமர்சிக்க தயங்குவதாகவும், பதுங்குவதாகவும் கூறப்படுகிறது.
இதனாலையே, நினைவுக் குறிப்புகள் வெளியாகும் முன்னர் அதில் உரிய திருத்தங்களை ஏற்படுத்த ஹரி முயன்று வருகிறார். இல்லை எனில் மன்னர் சார்லஸின் கோபத்திற்கு இலக்காக நேரலாம் என அவருக்கு புரிந்துவிட்டது என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
@getty
அடுத்த மாதம் ஹரி- மேகன் தம்பதியின் நினைவுக் குறிப்புகள் புத்தகம் வெளியாக உள்ளது. டிசம்பர் மாதம் நெட்ஃபிக்ஸ் தொடர் வெளியாகலாம் என்றே நம்பப்படுகிறது. ராஜகுடும்பத்துடன் இணைய திட்டமிட்டிருக்கும் நிலையில், கடைசியாக ஒருமுறை ராஜகுடும்பத்தை கடுமையாக விமர்சித்து, அதில் இருந்து ஆதாயம் தேட இளவரசர் ஹரி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2023ல் ராஜகுடும்பத்துடன் சமரச முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் இருவரும் பிரித்தானியா திரும்புவார்கள் என்றே கூறுகின்றனர். ஆனால், மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தொடர்பில் இருவரும் நினைவுக் குறிப்பில் விமர்சித்திருந்தால், இந்த திட்டங்கள் அனைத்தும் பாழாகும் எனவும் கூறப்படுகிறது.
@PA
இதனாலையே, கடைசி நேர திருத்தங்களை மேற்கொள்ள ஹரி முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, ஒரு தந்தையாக சார்லஸ் தமது மகனை ஏற்றுக்கொள்வார், விமர்சனங்களை ஒதுக்கிவிடுவார்.
ஆனால் ராஜகுடும்பத்தினரை விமர்சிக்கும் ஹரியை மன்னராக சார்லஸ் பொறுத்துக்கொள்ள வாய்ப்பில்லை எனவும், அவர் ஹரியை அதன் பின்னர் நம்பவும் மாட்டார் என்கிறார்கள் ராஜகுடும்ப ஆய்வாளர்கள்.