இளவரசர் வில்லியமைப்போல எங்களுக்கும் உரிமை உள்ளது: ஹரி, மேகன் தம்பதி
Prince Harry and Meghan feel they have a right to rival Prince William and Princess Kate: இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரைப்போல, தங்கள் விருப்பப்படி செய்ய தங்களுக்கும் உரிமை உள்ளது என ஹரி, மேகன் நம்புவதாக அவர்களுடைய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாட்டிங்காம் சென்றிருந்த இளவரசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு, யாரும் எதிர்பாராத வகையில் அமோக வரவேற்பு கிடைத்தது.
எங்களுக்கும் உரிமை உள்ளது
ஹரியும் மேகனும் 2020ஆம் ஆண்டு ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகினார்கள். அமெரிக்காவிலும் குடியேறினார்கள்.

இந்நிலையில், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பியுள்ளார்கள். அவர்கள் பிரித்தானியா திரும்பியதுமே, அவர்கள் சாதாரண குடிமக்கள்தான் என அரண்மனை வட்டாரம் அறிக்கை வெளியிட்டது.
ஆனால், முன்போலவே இப்போதும் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்களைப்போல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் துவங்கியுள்ளார்கள் ஹரியும் மேகனும்.
சமீபத்தில் அவர்கள் நாட்டிங்காமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து ராஜ குடும்ப விமர்சனர்கள் பலரும் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்கள்.
ஆனால், இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரைப்போலவே, தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தங்களுக்கும் உரிமை உள்ளது என ஹரியும் மேகனும் நம்புவதாக அவர்களுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்!