வெளிநாடொன்றில் வீடு வாங்கியுள்ள ஹரி மேகன் தம்பதி: எழுந்துள்ள புதிய சர்ச்சை
பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் என்ன செய்தாலும் சர்ச்சை ஆகிவிடும் போலுள்ளது.
சமீபத்தில் ஐரோப்பிய நாடொன்றில் வீடொன்றை வாங்கியுள்ளனர் ஹரி மேகன் தம்பதியர்.
ஆனால், அதில் ஒரு உள் நோக்கம் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது!
எழுந்துள்ள புது சர்ச்சை
பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் போர்ச்சுகல் நாட்டில் வீடொன்றை வாங்கியுள்ளார்கள்.
அதே நாட்டில் ஹரியின் சித்தப்பா மகளான யூஜீனிக்கும் ஒரு வீடு உள்ளது.
மேலும், ஹரியும் மேகனும் போர்ச்சுகல்லில் தங்க விசா வாங்கவும் வாய்ப்புள்ளது. தங்க விசா வாங்கினால், ஹரி மேகன் தம்பதியால் விசா இல்லாமல் ஐரோப்பாவின் ஷெங்கன் பகுதிகளுக்குள் பயணிக்க முடியும்.
அதுவும், இந்த சலுகை, பிரித்தானிய குடியுரிமையை கைவிட்ட மேகனுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆக, பிரித்தானிய குடியுரிமை இல்லாத நிலையிலும், ராஜ குடும்பத்தில் பணி செய்யாவிட்டாலும், பிரித்தானியாவின் அருகில், ஐரோப்பிய ஒன்றியத்தில் காலூன்ற ஹரி மேகனுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் என்கிறார்கள் ராஜ குடும்ப நிபுணர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |