முடிவெடுக்க ஹரி மேகனுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே: ஆனால்...
மன்னர் சார்ல்சுடைய முடிசூட்டுவிழாவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க இளவசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன.
இன்னும் சில நாட்கள் மட்டுமே மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழா மே மாதம் 6ஆம் திகதி நடைபெற உள்ளது.
முடிசுட்டு விழாவில் கலந்துக்கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்காத ஹாி,மேகன்!
முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்ள இளவரசர் ஹரிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்வது தொடர்பாக இன்னமும் ஹரியும் மேகனும் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை. அவர்கள் முடிவெடுப்பதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன.
ஆனால், சோகமான விடயம் என்னவென்றால், மன்னரின் முடிசூட்டுவிழாவின்போது, பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் நிற்கப்போகிறவர்களின் பட்டியல் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.
அதில் ஹரி மேகன் தம்பதியரின் பெயர் இல்லை! ஆக, முடிசூட்டுவிழாவில் கலந்துகொள்வது தொடர்பாக ஹரியும் மேகனும் என்ன முடிவெடுத்தாலும், அது பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் நிற்கப்போகிறவர்களின் பட்டியலில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்றே கருதப்படுகிறது.