ஹரி மேகன் பிரித்தானிய வீட்டிலிருந்து வெளியேற உத்தரவு: மன்னர் சார்லஸின் கோபத்தைத் தூண்டியது எது?
ஹரி மேகன் தம்பதியரை எலிசபெத் மகாராணியார் அவர்களுக்குக் கொடுத்த வீட்டிலிருந்து வெளியேற மன்னர் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார்.
இளவரசர் ஹரியும் மேகனும், ஓபரா பேட்டி முதல் நெட்ப்ளிக்ஸ் தொடர்வரை, பல்வேறு வகையில் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு அவமானங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தபோதுகூட மௌனம் காத்த மன்னர் சார்லஸ், தற்போது இப்படி ஒரு அதிரடி முடிவை எடுக்கக் காரணம் என்ன?
மன்னரின் கோபத்தைத் தூண்டியது எது?
தன் மனைவியாகிய ராணி கமீலாவை ஹரியும் மேகனும் அவமதிக்கத் துவங்கியதாலேயே மன்னர் இந்த முடிவெடுத்துள்ளார்.
கமீலாவை வில்லியாகக் காட்டத் துவங்கிய ஹரி
ஹரி தனது சுயசரிதைப் புத்தகமாகிய ஸ்பேரை விளம்பரப்படுத்தும்போது, தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் ராணி கமீலாவை வில்லி என குறிப்பிட்டார்.
கமீலா மோசமான சித்தியாக மாறிவிடுவார் என தான் பயப்படத் துவங்கியதாக குறிப்பிட்டுள்ள ஹரி, ஒரு கட்டத்தில், கமீலா மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், அப்போதுதான் அவரால் ஆபத்து குறைவாக இருக்கும் என தான் கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Image: Getty Images
அப்போது இளவரசராக இருந்த சார்லசை திருமணம் செய்ய கமீலா நீண்ட கால திட்டம் தீட்டியதாகவும், பல தகவல்களை அவர் ஊடகங்களுக்கு கசியவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார் ஹரி.
ஆகவே, தன் மகன் எல்லை மீறி விட்டதாக கருதும் மன்னர், அதைத் தொடர்ந்தே ஹரி மேகனை வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார்.
Image: REX/Shutterstock
Image: POOL/AFP via Getty Images