பிரித்தானியாவிற்கு 100 நாட்களில் புதிய பிரதமர்... ஹரி - மேகன் தம்பதிக்கு சிக்கல்: புதிய நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு
அடுத்த 100 நாட்களில் பிரித்தானியாவில் புதிய பிரதமர் ஒருவர் பொறுப்புக்கு வருவார் என்றும், 18 மாதங்களில் ஹரி - மேகன் தம்பதி குறித்த தகவல் ஒன்று வெளியாகும் எனவும் சவுத்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த புதிய நோஸ்ட்ராடாமஸ் என்பவர் கணித்துள்ளார்.
பெண் ஒருவர் பிரதமராக
கோவிட் பெருந்தொற்று, எலிசபெத் ராணியாரின் மரணம், லேபர் கட்சியின் சாதனை வெற்றி, ஜனாதிபதி ட்ரம்ப் மீதான கொலை முயற்சி உட்பட பல்வேறு சம்பவங்களை கணித்துள்ளதாக கூறும் அவர் தற்போது புதிய சில சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார்.
அடுத்த 100 நாட்களில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மாற்றப்பட்டு, பதிலுக்கு லேபர் கட்சியில் இருந்து பெண் ஒருவர் பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்புக்கு வருவார் என தாம் உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய கன்சர்வேட்டிவ் தலைவர் Kemi Badenoch துடிப்பான நபர் என்றாலும், அவரால் தற்போதைய சூழலில் அந்த கட்சியை ஒருங்கிணைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரத்தில் அதிர்ச்சி சம்பவமாக இளவரசர் ஆண்ட்ரூ இன்னொரு முறைகேட்டில் சிக்கி, அம்பலப்படுவார் என்றும் புதிய நோஸ்ட்ராடாமஸ் என்பவர் கணித்துள்ளார்.
அத்துடன், அடுத்த 18 மாதங்களில் ஹரி - மேகன் தம்பதி விவாகரத்து செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், அவர்களின் அரச குடும்பத்து பட்டங்கள் பறிக்கப்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.
ட்ரம்ப் மீது மீண்டும்
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் முதன்மையான தலைவர்கள் பலர் Reform கட்சிக்கு தாவுவார்கள் என்றும் புதிய நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும், காரில் இருந்து அவர் இறங்கும் போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும், ஆனால் அவர் உயிர் தப்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் உடனடி சமாதான ஒப்பந்தம் விரைவாக சிதைந்து, அண்டை நாடான பெலாரஸ் வழியாக ஒரு புதிய படையெடுப்பிற்கான பாதை உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார்.
தைவான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கும் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக கணித்துள்ள அவர், உலகம் இன்னும் பல, பல ஆண்டுகளுக்கு அணு ஆயுத யுத்தத்தை சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |