இனி இளவரசர் ஹரிக்கு பிரித்தானியாவில் முன்போல் வரவேற்பு கிடைக்காது: ராஜ குடும்ப நிபுணர்
இளவரசர் ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர் வெளியானதைத் தொடர்ந்து, இனி அவர்களுக்கு முன்போல் பிரித்தானியாவில் வரவேற்பு கிடைக்காது என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர்.
ராஜ குடும்பத்தை அவமானப்படுத்திவரும் நெட்ப்ளிக்ஸ் தொடர்
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட்டுவரும் நெட்ப்ளிக்ஸ் தொடர் தொடர்ந்து ராஜ குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான தகவல்களை வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில், இப்படி ராஜ குடும்பத்துக்கு தொல்லை கொடுக்கும் வகையில் ஹரியும் மேகனும் செயல்பட்டுவரும் நிலையில், முன்போல் ஹரி மேகன் தம்பதியருக்கு பிரித்தானியாவில் வரவேற்பு இருக்காது என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான Tom Bower என்பவர்.
இனி அவர்கள் பிரித்தானியாவில் வரவேற்கப்படமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன் என்று கூறும் Tom Bower, இனி எப்போதுமே ஹரிக்கு முன்போல் இங்கிலாந்தில் வரவேற்பு கிடைக்காது என்றே நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
இளவரசர் ஹரி தன்னை ராஜ குடும்பத்திலிருந்து துண்டித்துக்கொள்கிறார் என நான் நினைக்கிறேன் என்று கூறும் Tom Bower, அவரே தன்னை ஒரு வேண்டாத ஆளாக்கிக்கொள்கிறார் என்றும், மேகனைப் பொருத்தவரை, அவர் கதை முடிந்துவிட்டது, ஹரியும் அதே நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.