மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி!
பிரித்தானியா இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி, தங்கள் மகள் லில்லிபெட் டயானாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியா இளவரசர் ஹரியும் முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்துக்கொண்டனர்.
பின்னர் கடந்த ஆண்டு அரசு குடும்பத்தின் உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த இவர்கள் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.
ஹாரி-மேகன் தம்பதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. தங்களுடைய இரண்டாவது குழந்தைக்கு லில்லிபெட் டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என பெயரிட்டனர்.
இந்நிலையில், இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மகளின் புகைப்படத்தை இளவரசர் ஹாரி-மேகன் வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஹாரி-மேகன் தம்பதி வாழ்த்து அட்டை வெளியிட்டுள்ளனர்.
அதில் இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி, முதல் மகன் ஆர்ச்சி மற்றும் இரண்டாவது மகள் லில்லிபெட் டயானாவுடன் இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து செய்தி இடம்பெற்றுள்ளது.