இளவரசர் ஹரி-மேகன் தம்பதி ஓப்ரா வின்ஃப்ரேயுடன் மீண்டும் ஒரு நேர்காணல்! வெளியான பரபரப்பு தகவல்
இளவரசர் ஹரி-மேகன் தம்பதி ஓப்ரா வின்ஃப்ரேயுடன் மீண்டும் ஒரு நேர்காணலுக்கு இணைவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி ஓப்ரா வின்ஃப்ரே உடனான நேர்காணல், அமெரிக்காவில் ஒளிபரப்பானது. இதைத்தொடர்ந்து பிரித்தானியாவிலும் ஒளிபரப்பானது.
இந்த நேர்காணலில் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி பிரித்தானயா அரச குடும்பத்தின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் சுமத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இளவரசர் ஹரி-மேகன் தம்பதி ஓப்ரா வின்ஃப்ரேயுடன் மீண்டும் ஒரு நேர்காணலுக்கு இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளவரசர் ஹரி மற்றும் ஓப்ரா The Me You Can't See என்ற ஆவணப்படங்களில் தோன்றிய சிறிது நேரத்திலேயே நேர்காணல் பற்றிய செய்திகள் வந்துள்ளன.
The Me You Can't See என்ற ஆவணப்படத்தில் தனது தாயின் மரணம் தொடர்பான வேதனையை கையாண்டது எப்பது என்பது குறித்து இளவரசர் ஹரி மனம் திறந்துள்ளார்.