இளவரசர் ஹரியும் மேகனும் பிரித்தானியா திரும்புவது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
இளவரசர் ஹரி மீண்டும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமுக்கு விருப்பமில்லை என்பது உண்மைதான்.
ஆனால், ஹரியும் மேகனும் பிரித்தானியா திரும்புவது குறித்து பிரித்தானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
ஆய்வு முடிவுகள்
சமீபத்தில், பிரித்தானிய ஊடகம் ஒன்று, ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்கு திரும்புவதை விரும்புகிறீர்களா என மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
அப்போது, ஆய்வில் பங்கேற்றவர்களில் 93 சதவிகிதத்தினரும், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்கு திரும்புவதை விரும்பவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
14,220 பேரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 13,162 பேர், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்கு திரும்புவதற்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
வெறும் 7 சதவிகிதத்தினர் மட்டுமே ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்கு திரும்புவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |