ஜோ பைடன் மகளுடன் இணைந்து மையத்தை அமைத்த இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கல்
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகளுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மையம் ஒன்றை அமைத்துள்ளனர்.
ஆரோக்கிய மையம்
பென்சில்வேனியாவில் உள்ள Philadelphia நகரில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகள் ஆஷ்லே பைடனின் ஆரோக்கிய மையம் உள்ளது.
இந்த மையத்தின் இணை நிறுவனராக பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மெர்க்கல் தம்பதி சேர்ந்துள்ளனர்.
அறிக்கை
ஆஷ்லேயின் மையத்திற்கு ஹரி மற்றும் மேகனின் ஆதரவு 2023-2024ஆம் ஆண்டிற்கான அறக்கட்டளையின் தாக்க அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டது.
திங்களன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, 2020யில் நிறுவப்பட்ட அமைப்பின் மூலம் ஹரி, மேகனின் பரோபகார முயற்சிகளை விளக்குகிறது.
இந்த மையமானது அதிர்ச்சி சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செயல்படக்கூடியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |