ஹரி.,இந்தக் கோட்டை அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது: கேலி செய்த நிகழ்ச்சி
Harry meghan uk return mocked: இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் பிரித்தானியா திரும்பியது, நிகழ்ச்சி ஒன்றில் கேலி செய்யப்பட்டது.
இளவரசர் ஹரி, மேகன் தம்பதியின் சர்ச்சைக்குரிய பிரித்தானிய வருகை நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக கேலி செய்யப்பட்டது.
ஹரி, மேகன் தம்பதி
ஆறு ஆண்டுகளுக்கு முன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதி பிரித்தானியா திரும்பியுள்ளனர்.

முன்னதாக அவர்கள் சாதாரண குடிமக்களே என்றும், அவ்வாறே நடத்தப்படுவார்கள் என்றும் மன்னர் சார்லஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், Saturday Night Live UK நிகழ்ச்சியில் ஹரி, மேகன் இருவரும் கேலி செய்யப்பட்டனர்.
அந்நிகழ்ச்சியில் அரச குடும்பத்தினர் போல் வேடமிட்ட நடிகர்களில், கமில்லாவைப் பார்த்து 'சிற்றன்னை இராணி' என்று மேகன் கூறுகிறார்.
மன்னர் சார்லஸ் 'அந்த நெட்ஃபிலிக்ஸ் பணத்தை ஏற்கனவே செலவழித்துவிட்டேன் என்று சொல்லாதே' என ஹரியிடம் கூறுகிறார்.

அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது
நகைச்சுவை நடிகர்களான ஜாக் ஷெப் மற்றும் அயோவாடே பாம்க்போய் ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட சசெக்ஸ் தம்பதியினர், மன்னர் சார்லஸ் (லாரி டீன்) மற்றும் இராணி கமில்லா (எம்மா சிடி) ஆகியோரை அவர்களின் பால்மோரல் எஸ்டேட்டில் சந்திக்கின்றனர்.
அப்போது 'ஹரி நீ இங்கே என்ன செய்கிறாய்? இந்தக் கோட்டை அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது' சார்லஸ், தனது இளைய மகன் ஹரியிடம் கூறுகிறார்.
இதுபோல் ஒரு நீண்ட உரையாடலை ஹரி, மேகன் தம்பதியை கேலி செய்து வகையில் அந்த குழு செய்தது. பார்வையாளர்கள் இந்த நகைச்சுவைக் காட்சி குறித்த தங்கள் எண்ணங்களை இணையத்தில் உடனடியாக பகிர்ந்துகொண்டனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |