தேவையில்லாமல் மீண்டும் ட்ரம்பை எரிச்சலூட்டும் ஹரி மேகன் தம்பதி
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பிரித்தானிய இளவரசர் ஹரியை அவர் நாடுகடத்தக்கூடும் என்ற அச்சம் உருவானது.
ஆனால், ஏற்கனவே ஹரி தனது மனைவி மேகனால் பல பிரச்சினைகளை அனுபவித்துவருகிறார். ஆகவே, நான் அவரை தனியே விட்டு விட விரும்புகிறேன் என்று கூறிவிட்டார் ட்ரம்ப்.
ஆனால், தற்போது ஹரியும் மேகனும் மேற்கொண்டுவரும் சில நடவடிக்கைகளை மீண்டும் ட்ரம்பை எரிச்சலூட்டக்கூடிவையாக அமைந்துள்ளன.
மீண்டும் ட்ரம்பை எரிச்சலூட்டும் ஹரி மேகன் தம்பதி
ஆம், ட்ரம்பின் எதிர் தரப்புக்கு, அதாவது, ஜனநாயக கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு, ஹரி மேகன் தம்பதியர் பல ஆயிரம் டொலர்கள் நன்கொடை கொடுத்துள்ள விடயம் தற்போது வெளியாகியுள்ளது.
ஹரி மேகனுடைய ஆர்ச்வெல் தொண்டு நிறுவனம், Jiore Craig என்னும் ஜனநாயக கட்சியுடன் தொடர்புடைய ஊடகவியலாளருக்கு 2023ஆம் ஆண்டு 116,400 பவுண்டுகள் நன்கொடை வழங்கியுள்ளது.
மேலும், அவர் சார்ந்த Marcy Lab School என்னும் பள்ளிக்கும் ஆர்ச்வெல் தொண்டு நிறுவனம் 19,900 பவுண்டுகள் நன்கொடை வழங்கியுள்ளது.
2022இல் 95,000 பவுண்டுகள் Jiore Craigக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, அவர் சார்ந்த இணையதளம் ஒன்றிற்கு 90,000 பவுண்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
2023இல், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகளாக ஆஷ்லியின் தொண்டு நிறுவனத்துக்கு 199,000 பவுண்டுகள் நன்கொடை வழங்கியுள்ளனர் ஹரி மேகன் தம்பதியர்.
இப்படியே ட்ரம்பின் எதிரணியினருக்கு பல்லாயிரக்கணக்கில் நன்கொடை வழங்குவதன் மூலம் ஹரி மேகன் தம்பதியர், ட்ரம்பின் எரிச்சலுக்கு ஆளாகும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |