வின்ட்சர் கோட்டையை ஹரியும் மேகனும் விரும்பினர்: ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டதோ?
இளவரசர் ஹரி மற்றும் மேகன் அரச இல்லத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை நம்பி இருந்தனர்.
அவர்களுக்கு ஃப்ராக்மோர் காட்டேஜ் வழங்கப்பட்டது என தகவல்.
வின்ட்சர் கோட்டை இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் விரும்பினார்கள் ஆனால் அதற்கு பதிலாக ஃப்ராக்மோர் காட்டேஜ் வழங்கப்பட்டது என தி நியூ ராயல்ஸ் என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசெக்ஸ் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளவு ஏற்பட்டு இருந்த நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, மன்னர் மூன்றாம் சார்லஸ், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் பொது வெளியில் இணைந்து காணப்பட்டனர்.
Getty Images
இந்தநிலையில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ், வேல்ஸ் இளவரசர் வில்லியம், சசெக்ஸ் இளவரசர் ஹரி ஆகியோருக்கு இடையிலான உறவுகளை பல ஆண்டுகளாக ஆராயும் கேட்டி நிக்கோல்ஸ் எழுதிய தி நியூ ராயல்ஸ் என்ற புத்தகத்தில் பல உடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், சசெக்ஸ் இளவரசர் மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர் விண்ட்சர் கோட்டைக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு ஃபிராக்மோர் காட்டேஜ் வழங்கப்பட்டது என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images
2020ம் ஆண்டு இறந்த ராணியின் நெருங்கிய தோழியான எலிசபெத் அன்சனின் கூற்றுப்படி, இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு ராணி தனது தாராள சைகையை வழங்கியதாகவும், அதனை அவர்கள் மதிப்பார்கள் என்றும் நான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி
இவ்வாறு இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு வழங்கப்பட்ட காட்டேஜ் ராணி நுழையும் தோட்ட நுழைவு வாயிலுக்கு அடுத்ததாக இருந்தது, அது அவர்களுக்கு மிகப் பெரியதாக இருந்தது என்றும் எலிசபெத் அன்சனின் தெரிவித்துள்ளார்.