மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில்..இசை நிகழ்ச்சியை தவிர்க்கும் ஹரி மற்றும் மார்க்கல்? வெளியான தகவல்
லண்டனில் தனது தந்தை சார்லஸின் முடிசூட்டு விழா முடிந்த சில மணிநேரங்களிலேயே, இளவரசர் ஹரி மற்றும் மேகன் கிளம்பிவிடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மன்னரின் முடிசூட்டு விழா
அடுத்த மாதம் 6ஆம் திகதி மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாள் வின்ட்சர் கோட்டையில் நாடாகும் நட்சத்திர இசை நிகழ்ச்சி நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னரின் முடிசூட்டு விழாவில் ஹரி கலந்து கொள்வார் என பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் சக்செஸின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
இசை நிகழ்ச்சியை தவிர்க்கும் ஹரி
இந்த நிலையில் ஹரியின் பிரித்தானியப் பயணம் மிகவும் விரைவு பயணமாக இருக்கும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் அவர் மறுநாள் நடக்கும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்றும், மனைவி மேகனுடன் அவர் கலிபோர்னியாவுக்கு சிலமணிநேரங்களிலேயே சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
@AP
முடிசூட்டு விழா நாளிலேயே தனது மகள் ஆர்ச்சியின் பிறந்தநாள் என்பதால் அதற்கு அடுத்த நாளை குடும்பத்துடன் ஹரி கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 20,000 பொதுமக்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் கேட்டி பெர்ரி, லியோனல் ரிச்சி உட்பட பல பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@Getty Images