மன்னர் சார்லஸுடன் கிறிஸ்துமஸிற்காக இளவரசர் ஹரி, மேகன் தங்கமாட்டார்கள்: வெளியான தகவல்
Harry, meghan won't stay in uk for christmas: கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இளவரசர் ஹரி, மேகன் தம்பதி மன்னருடன் பிரித்தானியாவில் தங்கமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லஸுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக இளவரசர் ஹரி, மேகன் மற்றும் குழந்தைகள் பிரித்தானியாவில் தங்கமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
உறவுகளை சரிசெய்ய வாய்ப்பு
அமெரிக்காவில் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக, இளவரசர் ஹரி தனது மனைவி மேகனுடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு அரச குடும்பப் பணிகளை விட்டு விலகினார்.
இந்த நிலையில்தான் ஆகத்து மாதம் ஹரி, மேகன் தம்பதி திடீர் பயணமாக பிரித்தானியாவிற்கு திரும்பினர். அவர்களது இந்தப் பயணம் கிறிஸ்துமஸ் வரை நீடித்தால், அரச குடும்பத்துடன் தொலைதூர உறவுகளை சரிசெய்யத் தொடங்க ஒரு வாய்ப்பாக அமையலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தங்கள் குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக நண்பர் ஒருவர் கூறுகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக
ஹரி தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மன்னர் சார்லஸுடன் பிரித்தானியாவில் தங்கமாட்டார் என்றும், சாண்ட்ரிங்ஹாமிற்கு பதிலாக மான்டெசிட்டோவிற்கு அவர்கள் திரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
மேலும் அவர், பாரம்பரியத்தைத் தொடரும் விதமாக மன்னர் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நார்ஃபோக்கில் உள்ள தனது சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு விருந்தளிப்பார்.
ஆனால், ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் இப்போது முதல் கிறிஸ்துமஸ் வரை அமைதியாக இருக்க முயற்சி செய்கிறார்கள்; அப்போது அவர்கள் விடுமுறைக்காக கலிபோர்னியாவிற்குத் திரும்புவார்கள்' என டெய்லி மெயிலிடம் கூறினார்.
இதற்கிடையில் ஹரியும், மேகனும் பாடசாலை விடுமுறைகளையும், அரையாண்டு விடுமுறைகளையும் கலிபோர்னியாவிலோ அல்லது போர்ச்சுகலிலோ கழிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது; அங்கும் அவர்களுக்கு சொந்தமாக ஒரு சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
