இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் உணர்ச்சிகரமான இரவு: இறுதி சடங்குக்கு பிறகான எதிர்காலத் திட்டம் என்ன?
செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தை விட்டு வெளியேறிய போது, கண்ணீருடன் வெளிவந்த இளவரசர் ஹாரி.
மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்விற்கு பிறகு, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இருவரும் அன்றிரவு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தாக தெரியவந்துள்ளது.
பிரித்தானிய மகாராணியின் இறுதிச் சடங்கு கடந்த திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இருவரும் ராணியின் இறுதிச் சடங்கில் முக்கிய இடங்களை கொண்டு இருந்தனர்.
இளவரசர் ஹாரி, ராணியின் சவப்பெட்டிக்கு பின்னால் லண்டன் மற்றும் வின்ட்சர் கோட்டை வழியாக மேற்கொள்ளப்பட்ட ஊர்வலங்களில் கலந்து கொண்டார்.
அதைப்போல மேகன் மார்க்லே-யும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே முதல் செயிண்ட் ஜார்ஜ் சேப்பல் வழியாக நடைபெற்ற ஊர்வலங்களில் கலந்து கொண்டார்.
மேலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ராயல் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கலந்துகொண்ட ராணிக்கான தனியார் அடக்க சேவையிலும் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கலே கலந்து கொண்டனர்.
இளவரசர் ஹாரி, அமெரிக்க பெண்ணான மேகன் மார்க்லேவை திருமணம் செய்து கொண்டதை தொடர்ந்து, மூத்த அரச குடும்ப பதவியில் இருந்து இளவரசர் ஹாரி விலகியதுடன், அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்த ஜோடி, அரச குடும்பத்தின் இனவெறி தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் இந்த நடவடிக்கையால் அரச குடும்ப உறவினர்கள் இருவரிடமும் மிகவும் மெல்லிய உறவையே கொண்டு இருந்தனர்.
இந்நிலையில், பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அரச குடும்பத்தில் மீண்டும் இணைவதற்கான சூழ்நிலை உருவாகி வருவதாக தெரியவந்துள்ளது.
நேற்று இறுதிச் சடங்கு முடிந்ததும், செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தை விட்டு வெளியேறியபோது, ஹாரி தனது கன்னங்களைத் துடைத்தபடி இந்த ஜோடி கடைசியாக பொதுவில் காணப்பட்டனர்.
மேலும் அரச குடும்பத்தில் ராணியின் துக்கம் இன்னும் 7 நாட்களுக்கு அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே இருவரும் அமெரிக்கா செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம்... மாறிய மகாராணியாரின் உணர்வுகள்!.
தி டைம்ஸின் கூற்றுப்படி, அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு விரைவில் பறக்க விரும்புகிறார்கள், இதனால் அவர்கள் தங்கள் குழந்தைகளான ஆர்ச்சி, மூன்று மற்றும் ஒரு வயது லிலிபெட் ஆகியோருடன் மீண்டும் இணைவார்கள் என தெரிவித்துள்ளது.