குறை சொல்லிக்கொண்டே ஹரி மேகன் தொடரை பிரபலமாக்கியுள்ள மக்கள்: எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் தெரியுமா?
ஹரியையும் மேகனையும் குறை சொல்லிக்கொண்டே, அவர்களுடைய நெட்ப்ளிக்ஸ் தொடரை பிரபலமாக்கிவிட்டார்கள் மக்கள்.
ஹரி மேகன் தொடர் குறித்து எழுந்த விமர்சனம்
ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியும், ராஜ குடும்பத்துடனான உறவை வைத்தே வியாபாரம் செய்துவருகிறார்கள் பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும்.
முதலில் ஒரு நேர்காணல், அடுத்து ஒரு நெட்ப்ளிக்ஸ் தொடர், பின்னர் ஒரு புத்தகம் என ராஜ குடும்பத்தை அவமதிப்பதையே தொழிலாக்கிக்கொண்டுள்ளார்கள் ஹரியும் மேகனும்.
அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
Image: Netflix
விமர்சித்துக்கொண்டே நெட்ப்ளிக்ஸ் தொடரை பிரபலமாக்கியுள்ள மக்கள்
இந்நிலையில், ஹரி மேகனுடைய நெட்ப்ளிக்ஸ் தொடரின் ட்ரெய்லர் வெளியானது. அதைப் பார்த்ததும் விமர்சனங்கள் மேலும் கடுமையாகின.
சரி, இப்படி ராஜ குடும்பத்தை அவமதிகும் ஒரு தொடரை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று பார்த்தால், விமர்சித்துக்கொண்டே நெட்ப்ளிக்ஸ் தொடரை பிரபலமாக்கிவிட்டார்கள் மக்கள்.
ஆம், அந்த தொடர் வெளியான முதல் நாளே 2.4 மில்லியன் மக்கள் அதை பார்வையிட்டுள்ளார்கள்.
மற்றொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், மகாராணியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட The Crown என்னும் ஒரு தொலைக்காட்சித் தொடரும் வெளியானது. அந்த தொடரை விட, ஹரி மேகனுடைய தொடரை அதிகம்பேர் பார்த்திருக்கிறார்கள்.
The Crown தொடர் வெளியான முதல் நாள் அதைப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியன் மட்டுமே. ஆக, ஹரி மேகன் தொடரை குறை சொல்லிக்கொண்டே அதை பிரபலமாக்கிவிட்டார்கள் மக்கள்.