மன்னர் சார்லஸை பார்க்க வேண்டும் என்றால் ஹரி கண்டிப்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்!
பிரித்தானிய அரண்மனையில் தங்குவதற்கும், மன்னரை சந்திப்பதற்கும் ஹரி இனி அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
வின்ட்சர் கோட்டை
இந்த மாதத்தில் வின்ட்சர் கோட்டையில் தங்குவதற்கு இளவரசர் ஹரிக்கு அறை மறுக்கப்பட்டது.
ஆனால் ராணியின் மறைவு நாளில் தந்தை சார்லஸுடன் பால்மோரலில் தங்குவதற்கான வாய்ப்பு ஹரிக்கு வழங்கப்பட்டது.
SAMIR HUSSEIN/SAMIR HUSSEIN/WIREIMAGE
எனினும், தனது பயணத்திட்டம் காரணமாக அது ஹரிக்கு சாத்தியமற்றதாக மாறியதாக கூறப்பட்டது.
முறையான நோட்டீஸ்
இந்த நிலையில், மன்னர் சார்லஸை சந்தித்து ஏதேனும் அரச சொத்துக்களில் ஹரி தங்க விரும்பினால், அவர் முறையான நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த கடிதப் பரிமாற்றம் குறித்து மன்னர் சார்லஸ் அறிந்திருந்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
Chris Jackson/GETTY IMAGES
Telegraph கூற்றுப்படி, சனவரியில் பிரித்தானியாவுக்கு திரும்பும் ஹரி, விண்ட்சரில் உள்ள சொத்துக்களில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார், ஆனால் பொருத்தமான எச்சரிக்கை வழங்கப்பட்டால் மட்டுமே என கூறப்பட்டுள்ளது.
YUI MOK/PA IMAGES VIA GETTY
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |