ராணியாருக்கு கடைசி வணக்கம் செலுத்த இளவரசர் ஹரிக்கு அனுமதி மறுப்பு: பைத்தியக்காரத்தனம் என கொந்தளித்த மக்கள்
வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து ராணியாருக்கு இளவரசர் ஹரி இராணுவ வணக்கம்
மன்னர் சார்லஸ் எப்பேற்பட்டவர் என்பது இதில் இருந்து புரிந்துகொள்ளலாம் - ஆதரவாளர்கள் அதிர்ச்சி
ராணியாரின் இறுதிச்சடங்கில் இளவரசர் ஹரி, இராணுவ சீருடையை அணிய முடியவில்லை என்பதும் அவரது பாட்டிக்கு வணக்கம் செலுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதையும் அறிந்து அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராணியாரின் இறுதிச்சடங்குகள் நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் விண்ட்சர் கோட்டையில் உள்ள சிற்றாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
@reuters
இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் வைத்து ராணியாருக்கு இளவரசர் ஹரி இராணுவ வணக்கம் செலுத்தாது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம், இளவரசி ஆன் உட்பட முக்கிய குடும்ப உறுப்பினர்கள் ராணியாருக்கு வணக்கம் செலுத்த ஹரி மட்டும் வணக்கம் செலுத்தாமல் ஸ்தம்பித்து நின்றுள்ளார்.
மட்டுமின்றி, முக்கிய தருணத்தில் அவர் இராணுவ சீருடையிலும் இல்லை என்பதே அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மேலும், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட, ராணியாரின் பேரப்பிள்ளைகளின் சிறப்பு காவல் நிகழ்வின் போது மட்டும் ஹரி இராணுவ சீருடையில் காணப்பட்டார்.
@reuters
அதுவும், முன்னர் மறுக்கப்பட்டு, பின்னர் மன்னர் சார்லஸ் சிரப்பு அனுமதி அளித்த பின்னரே இராணுவ சீருடையில் ஹரி காணப்பட்டார். அதில், ராணியாருக்கான முக்கிய முத்திரை பறிக்கப்பட்டிருந்தது ஹரியை மொத்தமாக நொறுக்கியிருக்கும் என்றே கூறுகின்றனர்.
தற்போது வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தின் வெளியே, குடும்ப உறுப்பினர்களின் கடைசி வணக்கத்திற்காக ராணியாரின் உடல் சிறிது நேரம் வைக்கப்பட்டபோது, ஹரிக்கு வணக்கம் செலுத்தும் உரிமை மறுக்கப்பட்டது.
ராஜகுடும்ப உறுப்பினர்கள் முக்கிய தருணங்களில் இராணுவ சீருடையில் காணப்படுவது மரபாக பின்பற்றப்படுகிறது. ஆனால், 2020ல் ஹரி மொத்த பொறுப்புகளில் இருந்தும் வெளியேறி, தமது காதல் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறிய பின்னர், அவருக்கான சிறப்பு அந்தஸ்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். வில்லியம் போல் அல்லாமல் இராணுவத்தில் பத்தாண்டுகள் செயல்பட்டவர் இளவரசர் ஹரி. அதுவும் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருமுறை ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளார்.
@reuters
அவருக்கே இராணுவ சீருடை அணிய மறுப்பா என கேள்வி கேட்டுள்ளனர். மேலும், மன்னர் சார்லஸ் எப்பேற்பட்டவர் என்பது இதில் இருந்து புரிந்துகொள்ளலாம் எனவும் மக்கள் கூறியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் போரின் போது இராணுவத்தில் பணியாற்றிய ஹரிக்கு சீருடை அணிய மறுக்கப்பட்டுள்ளதும் வணக்கம் செலுத்த அனுமதிக்காததும் பைத்தியக்காரத்தனம் என ஒருவர் கொந்தளித்துள்ளார்.