90'ஸ் கிட்ஸ் பேவரைட் ஹாரிபாட்டர் நடிகர் காலமானார்!
அயர்லாந்து நடிகரான மைக்கேல் கேம்போன் தனது 82வது வயதில் நிமோனியாவினால் காலமானார்.
ஹாரிபாட்டர் படத்தில் அல்பஸ் டம்பிள்டோர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகப்புகழ் பெற்றவர் சர் மைக்கேல் கேம்போன் (82).
பிரிட்டிஷ் மேடை நடிகரான இவர், 1965ஆம் ஆண்டு வெளியான ஒதெல்லோ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தனது 60 ஆண்டுகால திரை வாழ்க்கையில் ஹரி பாட்டர் படத்தின் 8 பாகங்களில் நடித்து இளைய தலைமுறையினர் விரும்பப்படும் நடிகராக மாறினார் மைக்கேல்.
இந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைக்கேல் கேம்போன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.
மைக்கேலின் மனைவி லேடி கேம்போன் மற்றும் மகன் பெர்கஸ் கேம்போன் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'சர் மைக்கேல் கேம்போனின் இழப்பை அறிவிப்பதில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகிறோம்' என கூறப்பட்டுள்ளது.
இது திரையுலகினரையும், ஹாரிபாட்டர் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Jack Taylor/Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |