'Harry Potter' மைக்கேல் கேம்பன் காலமானார்... சோகத்தில் ரசிகர்கள்!
"ஹாரி பாட்டர்" திரைப்படங்களில் ஆல்பஸ் டம்பில்டோராக நடித்ததற்காக மிகவும் பிரபலமான நடிகர் மைக்கேல் காம்பன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு தனது 82 வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்பத்தார்கள் தெரிவித்துள்ளனர்.
'Harry Potter'
உலகளவில் சிறுவர்கள் அனைவரும் கொண்டாடிய ஒரு மாயா ஜால படம் என்றால் அது "ஹாரி பாட்டர்" என்று தான் கூறமுடியும். உலகில் நடக்கும் சாகசங்கள், பறக்கும் புத்தகங்கள், அமானுஷ்யங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகளை ரசிக்க வைத்த படமாகும்.
இந்த திரைப்படமானது முதலில் ஒரு நாவலாக வெளியாகியது. இதில் ஹார் பாட்டர், ஹெர்மாயினி, ரான் வீஸ்லி, டம்பிள் டோ, டோப்பி கதாபாத்திரங்கள் நாவலுக்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தன.
இதில் ஹாரியை வழிநடத்தி செல்லும் ஆல்பஸ் டம்பிள்டோர் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மைக்கேல் கேம்போன். இவரது நடிப்பும் அனைவரையும் ரசிக்க செய்தது என்று கூறமுடியும்.
இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
உயிரிழந்த மைக்கேல் காம்பன்
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் மனைவி லேடி கேம்போன் அறிவித்துள்ளார்.
R.I.P Michael Gambon ??️
— Critics Choice Awards (@CriticsChoice) September 28, 2023
The actor best known for his role as Hogwarts headmaster Albus Dumbledore in “Harry Potter” movies, has died. He was 82.#michaelgambon #harrypotter pic.twitter.com/ULju7wh3Qp
மேலும் இவர் 1965ம் ஆண்டு வெளிவந்த ஒதெல்லோ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவரின் மறைவால் திரையுலகமே சோகத்தில் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |