மீண்டும் திரைப்படத்தில் நடிக்கும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்
ஒரு நடிகையாக இருந்து இளவரசர் ஹரியை திருமணம் செய்ததால் இளவரசி ஆன மேகன், மீண்டும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
மீண்டும் திரைப்படத்தில் நடிக்கும் மேகன்

திரைப்படங்களில் காட்டப்படுவதுபோலவே வாழ்க்கை அமையவேண்டும் என ஏராளம் கனவுகளுடன் வாழ்ந்துவந்த அமெரிக்கப் பெண், மேகன் மார்க்கல்.
குடும்ப வாழ்க்கை இனிமையாக இல்லாமல், தொலைக்காட்சியில் காலடி வைத்து, எப்படியாவது புகழ் பெறவேண்டும் என்பதற்காக திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை மணந்து, அதிலும் திருப்தியில்லாமல், சிறிய வயதில் கண்ட கனவை நனவாக்க, திட்டமிட்டு இளவரசர் ஹரியை சந்தித்து, முதல் கணவரை விவாகரத்து செய்து, இளவரசி என்னும் நிலையை அடைந்தவர் மேகன்.

ஆனால், ராஜகுடும்ப வாழ்க்கை கனவு கண்டதுபோல் இல்லாததால் அனுதினமும் பிரச்சினைகள் எழ, கடைசியில் ராஜகுடும்பத்திலிருந்தே வெளியேறியதுடன், தன் கணவரையும் குடும்பத்தை விட்டுப் பிரித்தார் மேகன்.
அதற்குப் பிறகு ஆடம்பரமாக வாழ என்னென்னவோ திட்டமிட்டும் ஒன்றும் நடக்காமல், இப்போது மீண்டும் திரைத்துறைக்கே திரும்பியுள்ளார் மேகன்.

ஆம், Close Personal Friends என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார் மேகன். லாஸ் ஏஞ்சல்ஸில் அந்த திரைப்படம் தயாராகிவருகிறதாம்.
ஆக, மேகன் மீண்டும் தனது விருப்பத் துறைக்கு திரும்பிவிட்டார். ஆனால், அவருக்காக குடும்பத்தையே பிரிந்த ஹரியின் கதி?
நண்பர்களையும் குடும்பத்தையும் பிரிந்து, ராஜகுடும்ப கௌரவத்தையும் இழந்து, சொந்த நாட்டை விட்டுவிட்டு, அமெரிக்காவில் வாழும் ஹரி என்ன சொல்கிறார்?

அவர் வேறு என்ன சொல்வார்? என் மனைவி நினைத்தது நடக்கவேண்டும் என்று அடம்பிடித்ததற்காக எலிசபெத் மகாராணியிடமே திட்டுவாங்கியவர் அவர்.
இப்போதும், என் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குப் போதும், அவர் தனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் எந்த வேலையை வேண்டுமானாலும் செய்யட்டும் என்று கூறியுள்ளார் ஹரி!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |