அந்த நூல் வெளியான 24 மணி நேரத்தில்... ஹரி- மேகன் தம்பதி வெளியேற்றப்பட்டதன் வெளிவராத பின்னணி
இளவரசர் ஹரியின் நினைவுக்குறிப்புகள் நூல் வெளியான 24 மணி நேரத்திலேயே Frogmore மாளிகையில் இருந்து வெளியேறும் உத்தரவை மன்னர் சார்லஸ் அறிவித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 11ம் திகதி
இனிமேல் Frogmore மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூ குடும்பம் குடியேறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரந்தான் ஐந்து படுக்கையறைகள் கொண்ட விண்ட்சர் இல்லத்தில் குடியேறுவதற்கு இளவரசர் ஆண்ட்ரூவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
@getty
இந்த நிலையில் தான் ஹரி -மேகன் விவகாரத்தில் மன்னர் சார்லஸ் எப்போது முடிவெடுத்தார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 11ம் திகதியில் இருந்தே இது தொடர்பில் மன்னர் சார்லஸ் தீவிரமாக ஆலோசித்து வந்ததாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இதனையடுத்தே பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் ஹரி - மேகன் தம்பதிக்கு வெளியேறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டுமின்றி, தங்கள் உடைமைகளை எடுத்துச்செல்ல சில வாரங்கள் கால அவகாசமும் அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது வெளியான தகவலில், சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா முடியும் வரையில் கால அவகாசம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 2018ல் ராணியாரால் ஹரி - மேகன் தம்பதிக்கு பரிசளிக்கப்பட்டது தான் ஐந்து படுக்கையறைகள் கொண்ட இந்த Frogmore மாளிகை.
@reuters
Frogmore மாளிகை
இதனாலையே, தங்களுக்கு வீடு என சொல்லிக்கொள்ள பிரித்தானியாவில் ஒரு இடமிருக்கிறது என ஹரி - மேகன் தம்பதி குறிப்பிட்டு வந்தனர். 2018 ஏப்ரல் மாதம் Frogmore மாளிகையில் குடியேறும் முன்னர் 2.4 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டு புதுப்பித்தல் நடவடிக்கையும் முன்னெடுத்தனர்.
ஆனால், வெறும் 6 மாதங்கள் மட்டுமே அவர்கள் Frogmore மாளிகையில் குடியிருந்தனர். அதன் பின்னர், ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறி கனடா, தொடர்ந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.
அத்துடன், Frogmore மாளிகை புதுப்பிக்க செலவிட்ட 2.4 மில்லியன் பவுண்டுகள் தொகையை இளவரசர் ஹரி திருப்பியும் செலுத்தினார். மட்டுமின்றி, Frogmore மாளிகையானது ஹரி - மேகன் தம்பதியால் குத்தகைக்கு எடுத்திருந்ததால், இளவரசி யூஜீன் மற்றும் கணவர் தங்கி வந்தனர்.
தற்போது அவர்களும் போர்த்துகல் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் Frogmore மாளிகையை ஒப்படைக்க ஹரி - மேகன் தம்பதிக்கு மன்னர் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.