முன்னாள் கணவர் செய்யவிருக்கும் செயல்: அச்சத்தில் ஹரியின் மனைவி மேகன்
இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், ஹரிக்கு மனைவியாகும் முன் வேறொருவரைத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த தகவல்.
முதல் திருமணம்
மேகன், ட்ரெவர் (Trevor Engelson) என்பவரை ஏழு ஆண்டுகள் காதலித்து, பின் 2011ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
Getty Images
ஆனால், அந்த திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில், அதாவது, 2013ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்தார் மேகன்.
மேகனுடைய முன்னாள் கணவர் செய்யவிருக்கும் செயல்
இந்நிலையில், மேகனுக்கு வயிற்றைக் கலக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மேகனுடைய முன்னாள் கணவர் தோல்வியில் முடிந்த தங்கள் திருமண வாழ்வு குறித்து ஒரு புத்தகம் எழுதப்போகிறாராம். ஏழு ஆண்டுகள் காதலித்து, திருமணம் செய்து இரண்டே ஆண்டுகளில் பிரிந்த தன் முன்னாள் மனைவியைக் குறித்து எழுத அவரிடம் எவ்வளவு விடயங்கள் இருக்கும்!
Getty Images
ஆகவேதான், தன் முன்னாள் கணவர் புத்தகம் எழுத இருப்பதை அறிந்து மேகன் கடும் அச்சத்திலிருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |