ஹரியின் மனைவி மேகனுடைய அரசியல் கனவு கலைந்தது: கமலா ஹரிஸ் அணியில் இடமில்லை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான விடயங்கள் சூடு பிடித்துவரும் நிலையில், அமெரிக்க அரசியலில் ஆர்வம் காட்டிய பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி கிடைத்துள்ளது.
மேகனுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி
இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை, கமலா ஹரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியும் Democratic National Convention என்னும் பிரம்மாண்ட கூட்டம் ஒன்று சிகாகோவில் நடைபெற உள்ளது.
அந்த நிகழ்ச்சியில், ஜோ பைடன், பில் க்ளிண்டன், பராக் ஒபாமா, ஹிலாரி க்ளிண்டன் முதலான பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், அமெரிக்க அரசியலில் ஆர்வம் காட்டிவருகிறார். அத்துடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சுற்றுப்பயணங்கள் என தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவர் ஆர்வம் காட்டுவதும் உலகம் அறிந்த விடயம்தான்.
ஆகவே, கமலா ஹரிஸின் முன்மொழிதல் நிகழ்ச்சியிலும் மேகன் கலந்துகொள்வார் என பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் மேகன் கலந்துகொள்ளமாட்டார் என தற்போது செய்திகள் வெளியாகிவருகின்றன.
காரணம் என்ன?
அதாவது, ஜனநாயகக் கட்சிக்குள் மேகனுடைய செல்வாக்கு குறைந்து வருவதாகவும், அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் நன்மையை விட, பாதகமே அதிகமாக இருக்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Harper பத்திரிகையின் வாஷிங்டன் டி சி பிரிவு ஆசிரியரான ஆண்ட்ரூ (Andrew Cockburn) என்பவர், அமெரிக்க வாக்காளர்கள் மீதான மேகனுடைய தாக்கம் மிகக் குறைவாகவே உள்ளது என்கிறார்.
மேகன் கமலாவின் முன் மொழிதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பக்கூடும். ஆனால், மக்களிடையே அவரது செல்வாக்கு குறைந்து அகல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது என்கிறார் அவர்.
என்றாலும், கலிபோர்னியாவில் வாழும் மேகன், உள்ளூர் அரசியலில் பங்கேற்க முயற்சிக்கக்கூடும் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |