இளவரசர் வில்லியமை திருமணம் செய்ததால் வேதனைக்குள்ளான கேட்: ஹரி வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய தகவல்
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் வெளியிட இருக்கும் நெட்ப்ளிக்ஸ் தொடர், மேலும் அதிக பிரசினைகளை உருவாக்கும் என கருதப்படுகிறது.
அந்த தொடரின் ட்ரெய்லரே பல சர்ச்சைக்குரிய விடயங்களைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இளவரசி கேட் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்து
அதாவது, இளவரசர் வில்லியமைத் திருமணம் செய்து ராஜ குடும்பத்துக்குள் வந்த கேட்டும் வேதனை அனுபவித்ததாக ஹரியின் தொடர் தெரிவிக்கிறது.
அந்த தொடரின் ட்ரெய்லரில், ராஜ குடும்பத்துக்குள் திருமணமாகி வரும் பெண்கள் கடுமையான வேதனையும் துன்பமும் அடைகிறார்கள் என்கிறார் இளவரசர் ஹரி.
@Getty Images
அந்த துன்பம் குறித்து அறிந்த நான் திகிடைந்தேன் என்று கூறும் ஹரி, அது மீண்டும் நடக்கக்கூடாது என்று விரும்பினேன், வேறு யாருக்கும் முழு உண்மையும் தெரியாது. எங்களுக்கு மட்டும் உண்மை தெரியும் என்கிறார்.
பிரிந்த குடும்பம் இணைய வாய்ப்புகளே இல்லை?
இப்படி ஹரியும் மேகனும் தொடர்ந்து ராஜ குடும்பம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருப்பதைப் பார்த்தால், வெளியாக இருக்கும் இந்த தொடர் மேலும் குடும்பத்துக்குள் பிளவை அதிகரிக்குமேயொழிய, குடும்பம் இணைவதற்கான அடையாளங்கள் எதையும் காணோம் என்றே தோன்றுகிறது.
@Getty Images

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.