ஹரி-மேகன் தம்பதியினரை புகைப்பட கலைஞர்கள் காரில் துரத்திய விவகாரம்: இளவரசர் கூறியது என்ன?
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி ஆகியோரை, புகைப்பட கலைஞர்கள் காரில் துரத்திய விவகாரத்தை பற்றி இளவரசர் ஹரி பகிர்ந்துள்ளார்.
நூலிலையில் தப்பிய தம்பதியினர்
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்தனர்.
@mirror
அந்த விழா முடிந்து தம்பதியினர் இருவரும் வாடகை கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, புகைப்பட கலைஞர்கள் சிலர் அவர்களை பின் தொடர்ந்து வந்து புகைப்படம் எடுக்க முயன்றனர்.
இதனால் அவர் சென்ற கார் வேகமாக செல்ல வேண்டி இருந்தது, மேலும் ஓட்டுநர் நியூயார்க் சாலை விதிகளை மீறி காரை தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார்.
@mirror
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சம்பவத்தில், தம்பதியினர் பயணித்த கார் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் ஓட்டப்பட்டதாகவும், மேலும் இதனால் யாருக்கும் காயங்களோ, விபத்தோ உண்டாகவில்லை என நியூயார்க் காவல் துறை தெரிவித்திருந்தது.
டயானாவின் மரணம்
இதனிடையே நூலிலையில் உயிர் தப்பிய ஹரி-மேகன் தம்பதியினரை பக்கிங்ஹாம் அரண்மனை, இது போன்ற பாதுகாப்பற்ற பயணம் ஆபத்தானது என எச்சரித்திருந்தது.
@mirror
இந்நிலையில் இளவரசர் ஹரி இச்சம்பவத்தை பற்றி தன் நண்பர்களிடம் பேசும் போது, இச்சம்பவம் தனது தாயான டயானாவிற்கு ஏற்பட்ட விபத்தை நினைவுபடுத்தியதாக கூறியுள்ளார்.
’அது ஒரு மோசமான சூழல், அவர்கள் எங்களை துரத்திக் கொண்டே வந்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக நாங்கள் தப்பிவிட்டோம்’ என அவர் கூறியதாக இளவரசர் ஹரியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.