நான் என் குடும்பத்துடன் இணைவது சிலருக்கு பிடிக்கவில்லை: இளவரசர் ஹரி
Harry says he wants to reconcile with his family: இளவரசர் ஹரி, தன் குடும்பத்துடன் சமரசம் செய்துகொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இளவரசர் ஹரி, தான் தன் குடும்பத்துடன் சமரசம் செய்துகொள்ள விரும்புவதாகவும், ஆனால், அது சிலருக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிலருக்கு பிடிக்கவில்லை
இளவரசர் ஹரி, தனது தந்தை மற்றும் சகோதரருடனான சிக்கலான உறவுகளைச் சரிசெய்ய விரும்புவதாக ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

நான் என் குடும்பத்துடன் இணைவதை சிலர் விரும்பவில்லை என்று கூறியுள்ள ஹரி, ஆனால், நான் இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும், உலகில் நடக்கும் மற்ற எல்லா விஷயங்களையும் கருத்தில் கொண்டால், குடும்பத்துடன் சமரசம் செய்துகொள்வதுதான் மிக முக்கியமான விஷயம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வடுக்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். ஆனால், நடந்த விஷயங்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமும் மனநிலையும் என்ன என்பதும், கடந்த காலத்தை விட்டுவிடுவது என்பதுமே நான் அனைவரையும் செய்ய ஊக்குவிக்கும் ஒரு விடயமாகும் என்றும் ஹரி கூறியுள்ளார்.
இந்நிலையில், ’தான் தன் குடும்பத்துடன் இணைவதை சிலர் விரும்பவில்லை’ என ஹரி குறிப்பிட்டது, அவரது சகோதரர் இளவரசர் வில்லியமையோ அல்லது அவரது குடும்பத்தின் வேறு எந்த உறுப்பினரையோ தாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஹரி, மேகன் தம்பதியரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.