சார்லஸ் மன்னரின் கோரிக்கையை முற்றாக நிராகரிக்கும் ஹரி- மேகன் தம்பதி: வெளியான பின்னணி
நினைவுக் குறிப்புகள் தொடர்பில் வெளியான தகவல்கள் ராஜகுடும்பத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியம்- கேட் தம்பதி உள்ளிட்ட ராஜகுடும்பத்து உறுப்பினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வாய்ப்பில்லை
ராணியார் மறைவுக்கு பின்னர் முதல் கிறிஸ்துமஸ் என்பதால், தமது மகன்கள் இருவருடனும் குடும்பத்தினருடனும் பண்டிகையை கொண்டாட முடிவு செய்த சார்லஸ் மன்னருக்கு ஏமாற்றம் மிஞ்சியதாக தகவல்.
இளவரசர் ஹரி தமது நினைவுக் குறிப்புகள் நூலை எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி வெளியிடவிருக்கிறார். அது தொடர்பான தகவல் வெளியாகி தற்போதே விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
@WireImage
குறித்த நூலால், ஏற்கனவே விரிசல் கண்டுள்ள உறவு, மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. மொத்தம் 16 மொழிகளில் வெளியாகும் ஹரியின் நினைவுக் குறிப்புகள் நூல் தொடர்பில் வெளியான தகவல்கள் ராஜகுடும்பத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு வந்திருந்த ஹரி- மேகன் தம்பதியை ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் பொதுவாக கண்டுகொள்ளவில்லை என்பதுடன், உரிய மரியாதையும் வழங்கவில்லை.
இந்த நிலையில், ராணியார் தற்போது உயிருடன் இல்லாத சூழலில் வில்லியம்- கேட் தம்பதி உள்ளிட்ட ராஜகுடும்பத்து உறுப்பினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஹரி ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், நினைவுக்குறிப்புகள் நூல் வெளியான பின்னர் இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்ப வாய்ப்பில்லை எனவும், இருக்கும் கொஞ்சம் மரியாதையும் அவர் இழக்க நேரிடும் எனவும் அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
PHOTO: ALEXI LUBOMIRSKI
ராணியாருக்கான இறுதிச்சடங்குகள் முடித்து கலிபோர்னியா திரும்பிய ஹரியிடம் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரும் இதுவரை தொடர்புகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால் தமது பிள்ளைகள் தொடர்பில் மன்னர் சார்லஸிடம் ஹரி பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மரியாதை நிமித்தம் இளவரசர் ஹரிக்கு அளிக்கப்பட்டிருந்த ராணுவ பதவியை மன்னர் சார்லஸ் ஏற்றுக்கொண்டுள்ளதாக அரண்மனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையான தமது வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பில் மூன்று நூல்களை இளவரசர் ஹரி வெளியிடவிருக்கிறார்.
மொத்தம் 36 மில்லியன் பவுண்டுகள் பேசப்பட்டு, அதில் 20 மில்லியன் பவுண்டுகள் ஹரி கைப்பற்றியுள்ளார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.