பிரசவ விடுப்பின் நடுவில் பணிக்கு திரும்பிய இளவரசர் ஹரி: அப்படி என்ன அவசர வேலை?
பிரித்தானிய இளவரசர் ஹரி, தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதைத் தொடர்ந்து பிரசவ விடுப்பில் இருக்கிறார். இந்நிலையில், ஒரு முக்கிய விடயத்துக்காக விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார் ஹரி.
அது என்னவென்றால், 2023ஆம் ஆண்டு Invictus Games என்னும் விளையாட்டுப் போட்டிகள் ஜேர்மனியின் Düsseldorf நகரில் நடைபெற உள்ளன. அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்காகத்தான் பிரசவ விடுப்பின் நடுவில் பணிக்குத் திரும்பியிருக்கிறார் அவர்
. Invictus Games என்னும் விளையாட்டுப் போட்டிகள் காயமடைந்த, உறுப்புக்களை இழந்த போர் வீரர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்த Invictus Games என்னும் திட்டத்தை கொண்டு வந்தவரே பிரித்தானிய இளவரசர் ஹரிதான்.
2020 மற்றும் 2021இல், கொரோனா காரணமாக அந்த விளையாட்டுப்போட்டிகளை நடத்த
முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது, அவற்றை மீண்டும் துவக்கத் திட்டமிட்டுள்ளார் ஹரி.
2022ஆம் ஆண்டிற்கான Invictus Games விளையாட்டுப்போட்டிகள் நெதர்லாந்தின் Hague
நகரில் நடைபெற உள்ளன.