திருமண நாளில் வில்லியம் மற்றும் கேட்டை கண்கலங்கவைத்த இளவரசர் ஹரி!
வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் ஏப்ரல் 2011-ல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தது.
இந்த திருமணத்தில் இளவரசர் ஹரி தான் தனது சகோதரனுக்கு பெஸ்ட் மேனாக உரையை நிகழ்த்தினார்.
இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் திருமண நிகழ்வு அரச நெறிமுறைகள், பாரம்பரியம் மற்றும் அரச குடும்ப உணர்ச்சிகள் அனைத்தும் நிறைந்ததாக இருந்தது.
ஆனால், திருமண விழா முடிந்ததும் நடனம், மது கொண்டாட்டம் மற்றும் சிறந்த மனிதனின் உரை (best man speech) ஆகிய அனைத்தும் இடன்பெற்று சாதாரண திருமணமாக மாறியது.
இந்த திருமணத்தில் இளவரசர் ஹரி தான் தனது சகோதரர் வில்லியமுக்கு பெஸ்ட் மேனாக செயல்பட்டு ஒரு முக்கியமான உரையை நிகழ்த்தினார். அது வேடிக்கையாகவும் இனிமையாகவும் இருந்தது, ஆனால் புது மணப்பெண்ணை கண்ணீரில் மூழ்கடித்தது.
ராயல் எழுத்தாளர் Katie Nicholl எழுதிய Harry: Life, Loss, and Love எனும் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில், இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனின் திருமண நிகழ்வு பற்றி கூறியுள்ளார். அதில் இளவரசர் ஹரியின் உரை பாசமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது ஆனால் வில்லியமை ஆழமாகத் தொட்டது என்று எழுதியுள்ளார்.
பெஸ்ட் மேனான ஹரியின் உரை உன்னதமான நகைச்சுவை உணர்வுடன் இருந்தது, மேலும் அவர் தனது சகோதரரைப் பற்றி பேசும்போது, 'கேட்டைச் சந்திப்பதற்கு முன்பு வில்லியமின் உடலில் காதல் எலும்பு இல்லை, ஆனால் வில்லியம் திடீரென்று தொலைபேசியில் அடிக்கடி முன்னுக்கும் போது, விடயம் தீவிரமாக இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தது' என்று கூறியதாக அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
கேட் மிடில்டன் மற்றும் வில்லியம் 29 ஏப்ரல் 2011 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் திருமணம் செய்து கொண்டனர்.