மன்னர் சார்லசிடமிருந்து அரியணையை கைப்பற்றுவார் ஹரி! 400 ஆண்டுகளுக்கு முன் நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு
நோஸ்ட்ராடாமஸின் கணிக்கப்பட்டபடி மன்னர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் தலைவராக குறுகிய காலத்திற்கு மட்டுமே இருப்பார்.
அவருக்கு பிறகு பிரித்தானிய அரியணையை அவரது இளைய மகன் இளவரசர் ஹரி கைப்பற்றுவார்.
400 ஆண்டுகளுக்கு முன்பே பிரபல எதிர்கால கணிப்பாளனார் நோஸ்ட்ராடாமஸின் கணிக்கப்பட்டபடி, மன்னர் சார்லஸிடம் இருந்து பிரித்தானிய அரியணையை இளவரசர் ஹரி கைப்பற்றுவார் என்று கூறப்படுகிறது.
2022-ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் 95 வயதில் காலமான பிறகு, 74 வயதில் மன்னர் சார்லஸ் மன்னராக வருவார் என்று 1555-ஆம் ஆண்டில் நோஸ்ட்ராடாமஸ் என்று பொதுவாக அறியப்படும் புகழ்பெற்ற எதிர்கால கணிப்பாளர் மைக்கேல் டி நோஸ்ட்ரேடேம் (Nostradamus) கணித்தார்.
ராணியின் மறைவுக்குப் பிறகு, நோஸ்ட்ராடாமஸின் மிகப் பெரிய நிபுணர்களில் ஒருவரான Mario Reading, நோஸ்ட்ராடாமஸ் தனது கவிதையில் ராணியின் சரியான இறப்பு ஆண்டைக் கணித்திருப்பதை வெளிப்படுத்தினார்.
மன்னர் சார்லஸ் அரியணையைத் துறந்த பிறகு எதிர்பாராத நபர் ஒருவர் பிரிட்டிஷ் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணித்ததாக கூறுகிறார்.
Reading-ன் படி, இளவரசர் சார்லஸ் மன்னராக வருவார், ஆனால் அவரது ஆட்சி குறுகியதாக இருக்கும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு கூறுகிறது. இளவரசி டயானா மற்றும் அவரது வயதிலிருந்து விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களால் அவருக்கு எதிராக ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, மன்னர் சார்லஸ் அரியணையைத் துறக்க நிர்பந்திக்கப்படுவார், மேலும் பிரித்தானிய மன்னரின் இடத்தை இளவரசர் வில்லியம் ஏற்க மாட்டார்.
இது தானாகவே இளவரசர் ஹரியை அரசனாக்கும். இதன்மூலம் 38 வயதான ஹரியை, மன்னர் ஒன்பதாம் ஹென்றியாக மாற்றும் என்று நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு கூறுகிறது.
அடோல்ஃப் ஹிட்லரின் எழுச்சி, லண்டனில் ஏற்பட்ட பெரும் தீ, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை மற்றும் 9/11 பயங்கரவாத தாக்குதல்கள் போன்ற பல சம்பவங்களை நோஸ்ட்ராடாமஸ் சரியாகக் கணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானிய அறியணையைப் பற்றிய இந்த கணிப்பு சரியானதாக இருக்குமா என்பதாய் பொருத்திருந்து பார்க்கலாம். ஏனெனில், இளவரசர் ஹரிக்கு நாளை பிறந்தநாள் (செப்டம்பர் 15), அவருக்கு 38 வயதாகிறது.