இளவரசர் ஹரியின் எதிர்பாராத உக்ரைன் பயணம்: கடும் விரக்தியில் சகோதரர் வில்லியம்
போர் நடக்கும் உக்ரைனுக்கு இளவரசர் ஹரியின் திடீர் பயணம் அவரது சகோதரர் வில்லியமை விரக்தியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் கோபம்
அப்படியான ஒரு பயணத்திற்கு அனுமதி மறுத்ததற்காக இளவரசர் வில்லியம் அரண்மனை அதிகாரிகளிடம் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வியாழக்கிழமை உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இளவரசர் ஹரி, Lviv நகரில் தங்கவைக்கப்பட்டுள்ள டசின் கணக்கான காயமடைந்த இராணுவ வீரர்களை சந்தித்துள்ளார்.
ஆனால் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டே இளவரசர் வில்லியம் முன்னெடுக்கவிருந்த உக்ரைன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹரி உக்ரைன் சென்று திரும்பியுள்ளதை அறிந்து கடும் விரக்தியடைந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம் கென்சிங்டன் அரண்மனை அதிகாரிகளிடம் கொந்தளித்துள்ளதாக கூறப்படுகிறது.
வில்லியம் கடந்த மாதம் உக்ரைனின் அண்டை நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவிற்கு விஜயம் செய்திருந்தார். நேட்டோ துருப்புகளுடன் அவர் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டார்.
வேல்ஸ் இளவரசர்
இருப்பினும், போர் நடக்கும் உக்ரைனுக்கு ஒருமுறையேனும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்துள்ளார். ஆனால் தமக்கு முன்னரே தமது சகோதரர் உக்ரைன் சென்றுள்ளதால் வில்லியம் கொஞ்சம் விரக்தியடைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அரண்மனை அதிகாரிகள் மட்டுமின்றி, பாதுகாப்பு அதிகாரிகளும் வேல்ஸ் இளவரசர் உக்ரைன் பயணப்படுவதை நிராகரித்திருந்தனர் என்றே கூறப்படுகிறது.
கடந்த 2020 ஜனவரி மாதம் இளவரசர் ஹரி தமது குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறியதில் இருந்தே, அல்லது முன்னாள் நடிகையான மேகன் மெர்க்கலை இளவரசர் ஹரி காதலித்து திருமணம் செய்துகொண்டதில் இருந்தே சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து பிரிவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |