பிரித்தானிய குடியுரிமை தொடர்பில் இளவரசர் ஹரியின் மனைவி எடுக்கவிருக்கும் முடிவு
Meghan Markle may revive British citizenship: இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், பிரித்தானியக் குடியுரிமை பெறும் முயற்சிகளை மீண்டும் துவங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது அமெரிக்கப் பெண்ணான மேகனுடைய நீண்டகால ஆசை என சில ராஜ குடும்ப விமர்சகர்கள் எழுதியதுண்டு.

ஆனால், ராஜ வாழ்வு அவர் எதிர்பார்த்தது போல் இல்லாததால், ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறினார் மேகன், ஹரியையும் குடும்பத்திலிருந்து பிரித்துக்கொண்டு!
இந்நிலையில், மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்பியுள்ளனர் ஹரி, மேகன் தம்பதியர்.
பிரித்தானியக் குடியுரிமை பெற முயற்சி?
அமெரிக்கப் பெண்ணான மேகன், பிரித்தானிய இளவரசரான ஹரியை திருமணம் செய்துகொண்டாலும், அதற்காக அவருக்கு உடனடியாக பிரித்தானியக் குடியுரிமை வழங்கப்படவில்லை.
அதேபோல, விரைவாக குடியுரிமை பெற வழிவகை செய்யும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவும் இல்லை.

வழக்கமாக வெளிநாட்டவர் ஒருவர் பிரித்தானியக் குடியுரிமை பெற என்ன செய்யவேண்டுமோ, அதே நடவடிக்கைகள்தான் அவர் ஹரியை திருமணம் செய்தபோதும் துவக்கப்பட்டன.
ஆனால், ஹரியும் மேகனும் பிரித்தானியாவிலிருந்து வெளியேறியதால், மேகனுடைய பிரித்தானிய குடியுரிமை பெறும் நடவடிக்கைகள் நின்றுபோயின.
இந்நிலையில், இப்போது மீண்டும் மேகன் தன் கணவர், பிள்ளைகளுடன் பிரித்தானியா திரும்பியுள்ளார்.
ஆக, மேகன் பிரித்தானியக் குடியுரிமை பெறும் முயற்சிகளை மீண்டும் துவக்கக்கூடும் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.