தேங்காய் எண்ணெய் விற்று பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்தவர்.., எலி தொல்லையால் இவர் எடுத்த அந்த ஒற்றை முடிவு
தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதற்கு தனது ஐடியாவை பயன்படுத்திய ஒருவர் இப்போது பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
யார் அவர்?
1970 -களில் இந்தியாவில் பெரிய டின்களில் மட்டுமே தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்து வந்தனர். அது ஏனென்றால் எலி தொல்லையால் மட்டுமே 15 லிட்டர் டின்களில் மட்டுமே தேங்காய் எண்ணெய்யை எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்தன.
இந்திய மாநிலமான குஜராத்தை சேர்ந்தவர் ஹர்ஸ் (Harsh Mariwala). இவர் தனது குடும்ப தொழிலான மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில், எண்ணெய் தொழிலுக்கு நுழைய வேண்டும் என திட்டமிட்டார்.
பின்னர், பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி சதுர வடிவ பாட்டில்களில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய தொடங்கினார். எலி தொல்லை காரணமாகவே டின்களில் விற்பனை செய்வதை அறிந்த இவர் இந்த முடிவை எடுத்தார். ஆனால், அப்போது இது பெரிதும் முக்கியத்துவமாக பார்க்கப்படவில்லை.
ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனம்
இதனைத்தொடர்ந்து, 10 ஆண்டுகளாக இதை பற்றி ஆய்வு செய்தார். அதன்படி, தேங்காய் எண்ணெய் பாட்டிலை பிளாஸ்டிக்கில் சிலிண்டர் வடிவில் வடிவமைத்து பாராசூட் தேங்காய் எண்ணெய் விற்பனையை ஆரம்பித்தார்.
இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 1990 -ம் ஆண்டு ரூ.100 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது. ஆனால், 1993 -ம் ஆண்டு டாடாவிடம் இருந்து நிஹர் தேங்காய் எண்ணெயை ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் வாங்கியது. இந்த நிறுவனத்துக்கும் பாராசூட் நிறுவனத்துக்கும் தான் போட்டி.
ஆனால், பாராசூட்டின் தூய்மை தன்மையை முன்னிலைப்படுத்தி பெரிய அளவில் விளம்பரங்களை ஹர்ஷ் மேற்கொண்டார். இதன்பின், தனது தோல்வியை ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் ஒப்புக்கொண்டதால் 2006 -ம் ஆண்டில் நிஹர் எண்ணெய் நிறுவனத்தை பாராசூட் நிறுவனமே வாங்கியது.
தற்போது பாராசூட் குழுமத்தின் மேரிகோ நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி ரூபாய். மேலும், இந்நிறுவனத்தில் கீழ் 18 பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |