மன்னர் சார்லசின் முடிசூட்டுவிழாவை ஹரியும் மேகனும் தவிர்க்கலாம்: தந்தையின் கடும் தண்டனையால் மாறிய முடிவுகள்
இதுவரை தன் இளைய மகனிடம் இரக்கம் மட்டுமே காட்டி வந்த மன்னர் சார்லஸ், முதன்முறையாக அவருக்கு கடும் தண்டனை ஒன்றை வழங்கியுள்ளார்.
மகாராணியார் பரிசாக கொடுத்த வீட்டிலிருந்து வெளியேற உத்தரவு
ஆம், மறைந்த பிரித்தானிய மகாராணியாரும், மன்னரின் தாயும், ஹரியின் பாட்டியுமான இரண்டாம் எலிசபெத், ஹரி மேகன் திருமணத்தின்போது அவர்களுக்கு Frogmore Cottage என்னும் வீட்டை பரிசாக வழங்கியிருந்தார்.
ஆனால், தற்போது, அமெரிக்காவில் வாழும் ஹரி மேகன் தம்பதியர், பிராக்மோர் இல்லத்தைக் காலி செய்யுமாறு பக்கிங்காம் அரண்மனை அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த வீட்டிலுள்ள பொருட்களை அவர்கள் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றுவிடும் பட்சத்தில், அவர்களுக்கு அரண்மனையில் தங்க இடம் கிடையாது.
மன்னரின் கடுமையான தண்டனையால் ஹரியும் மேகனும் அதிர்ந்துபோயிருப்பதாக கூறப்படுகிறது.
Credit: The Mega Agency
நிபுணர் கருத்து
ராஜ குடும்ப நிபுணரான Angela Levin, மன்னருடைய உறுதியான இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
ராஜ குடும்பம் இப்படி உறுதியான ஒரு முடிவை எடுத்ததை அறிந்து தான் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த முடிவு ஹரியும் மேகனும் பிரித்தானியா வருவதற்கு முடிவு கட்டும் என்று கூறியுள்ளார்.
உங்களுக்கு எங்கேயாவது தங்கவேண்டுமானால், நீங்களே அதற்கான இடத்தை ஆயத்தம் செய்துகொள்ளுங்கள், ஆனால், அது ராஜ குடும்ப கட்டிடங்களில் அல்ல என்கிறார் அவர்.
அத்துடன், மன்னர் எடுத்துள்ள இந்த நடவடிக்கை காரணமாக, ஹரியும் மேகனும் அவருடைய முடிசூட்டுவிழாவிற்கு வருதை தவிர்க்கக்கூடும் என்றும் கூறியுள்ளார் அவர்.
Credit: Netflix