யூசுப் பதான் மாதிரி அதிரடியாக விளையாடும் தமிழக வீரர் - ஹர்சா போக்ளே பெருமிதம்
கிரிக்கெட் உலகின் வர்ணனையாளர் ஹர்சா போக்ளே தமிழக வீரர் ஒருவரை மனம் விட்டு பாராட்டியுள்ளார்.
மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் நடக்கவிருக்கும் 15வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்துள்ள இந்த வீரர்களின் பட்டியலில் 2 இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவார்கள் என்று வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய இஷான் கிஷன் ஆவார். அவர் பேட்ஸ்மேன் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியையும் செய்து வருகிறார். மேலும் இந்திய வீரர் என்பதால் கண்டிப்பாக அவருக்கு அதிக மவுசு இருக்கும் என ஹர்சா போக்ளே கூறியுள்ளார்.
இதேபோல் தமிழக வீரரான ஷாருக்கானுக்கு ஏலத்தொகை நிச்சயம் பல கோடிகளுக்கு செல்லும் என அவர் கணித்துள்ளார். ஷாரூக் யூசுப் பதான் போல அதிரடியாக விளையாடுவதாகவும், கடந்த சீசனில் அவர் தனது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியில் தனது திறமையை நிரூபித்தார் என்றும் ஹர்சா போக்ளே தெரிவித்துள்ளார்.