ரூ.50 லட்சம் சம்பளம்... பலரையும் வியந்து பாராட்ட வைத்த மாணவன்
இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் ஆண்டுக்கு 50 லட்சம் சம்பளத்தில் கூகிள் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
பிளாக்செயின் தொழில்நுட்பத்தில்
அந்த மாணவன், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT உள்ளிட்டவையை சார்ந்தவன் அல்ல என்பது தான் இதன் சிறப்பு.
MIT-World Peace பல்கலைக்கழக மாணவனான ஹர்ஷல் ஜூய்கார் (Harshal Juikar) பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
சிறப்பான நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்படும் மாணவர்களுக்காக சில குறிப்புகளையும் ஹர்ஷல் ஜூய்கர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், ஆர்வமாக இருங்கள், விடாமுயற்சியுடன் இருங்கள் மற்றும் அறியப்படாதவற்றை ஆராய பயப்பட வேண்டாம்.
மேலும், நமது உணர்வுகளைப் பின்தொடர்வதில் தான் நாம் உண்மையிலேயே நமது நோக்கத்தைக் காண்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கு ரூ.64.61 லட்சம்
இந்த ஆண்டு துவக்கத்தில், Avni Malhotra என்ற IIM மாணவர் ஒருவர் ஆண்டுக்கு ரூ.64.61 லட்சம் சம்பளத்திற்கு மைக்ரோசாப்ட் சிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டார்.
ஜெய்ப்பூரை சேர்ந்த அவ்னி மல்ஹோத்ரா, ஆறு சுற்று நேர்காணல்களுக்குப் பிறகு தமது கனவு வேலையை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |