2027 ஐபிஎல்; 4 கோடி குறைவான ஊதியத்திற்கு அணி மாறும் ஹர்ஷல் படேல்
harshal patel traded to gujarat titans with 4 crores paycut: 2027 ஐபிஎல் தொடருக்கு தக்க வைக்க, விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணிகள் சமர்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், இன்று 4 வீரர்கள் அணிகளிடையே பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
GTக்கு செல்லும் ஹர்ஷல் படேல்
2025 ஐபிஎல் தொடர் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியில் விளையாடி வந்த ஹர்ஷல் படேல், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2025 ஏலத்தில் SRH அணியால் ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஹர்ஷல் படேல், தற்போது ரூ.4 கோடிக்கு GT அணிக்கு மாறுகிறார்.
Ghar ni vaat j alag chhe! Welcome home, Harshal Titan Patel 🏡💙 https://t.co/QdqvCGeFOA
— Gujarat Titans (@gujarat_titans) November 17, 2026
2012 ஐபிஎல் தொடரில் அறிமுகமானதிலிருந்து டெல்லி, பெங்களூரு, பஞ்சாப், ஹைதராபாத் என 4 அணிகளுக்காக 124 போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
RR அணிக்கு செல்லும் ஷமி, எம்.சித்தார்த்
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியிலிருந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
LSG அணியால் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட ஷமி, தற்போது ரூ.8 கோடி என்ற திருத்தப்பட்ட கட்டணத்தில் RR அணிக்கு மாறுகிறார்.

முகமது ஷமி, 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 145 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
🚨 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 🚨 Mohd Shami and M. Siddharth traded to @rajasthanroyals, Sam Curran traded to @LucknowIPL. More Details 🔽 | #TATAIPL https://t.co/Y6bdr1YXma
— IndianPremierLeague (@IPL) November 17, 2026
சுழற்பந்து வீச்சாளர் எம். சித்தார்த்தும், LSG அணியிலிருந்து தற்போதைய கட்டணமான ரூ.75 லட்சதிற்கு RR அணிக்கு மாறுகிறார்.

LSG செல்லும் சாம் கரண்
இருவருக்கும் பதிலாக ஆல்-ரவுண்டர் சாம் கரண், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தனது தற்போதைய கட்டணமான ரூ.2.4 கோடிக்கு LSG அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாம் கரண் தனது ஐபிஎல் வாழ்க்கையில், 59 விக்கெட்டுகளை வீழ்த்தி 997 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.