ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக விளையாட விருப்பம் - ஹர்ஷல் பட்டேல் கருத்து
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இந்த அணியில் தான் விளையாட ஆசை என்று வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் நடக்கவிருக்கும் 15வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்
இதனிடையே பத்து அணிகளை கொண்டு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் 2022 ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட ஆசை என்பது குறித்து பேசியுள்ளார்.
2021 ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிகமான விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் இடம் பெற்ற ஹர்ஷல் படேல், பெங்களூரு அணியில் தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை பெங்களூரு அணி விடுவித்தது.
இதனிடையே பேட்டி ஒன்றில் தன்னுடைய இந்த நிலைமைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் காரணம் என்றும், மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன் என்றும் ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார்.