லண்டனில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: பெற்றோர் கேள்வி
இந்திய இளம்பெண்ணொருவர் லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், தங்கள் மகள் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் கொலையாளி ஏன் கைது செய்யப்படவில்லை என அந்த இளம்பெண்ணின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லண்டனில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளம்பெண்

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருமணமாகி தன் கணவருடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்தார் ஹர்ஷிதா ப்ரெல்லா (24).
ஹர்ஷிதாவும் அவரது கணவரான பங்கஜ் லம்பாவும் (23) இங்கிலாந்தின் Northamptonshireஇலுள்ள Corby என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.

இந்நிலையில். கடந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஹர்ஷிதா.
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை
தன் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹர்ஷிதா பிரித்தானிய பொலிசில் புகாரளித்தும் அவர்கள் முறைப்படி சரியான நடவடிக்கை எடுக்காத நிலையில், அவரைக் கொலை செய்த அவரது கணவரான பங்கஜ் தலைமறைவாகிவிட்டார். இன்னமும் அவர் சிக்கவில்லை.

பெற்றோர் எழுப்பியுள்ள கேள்வி
இந்நிலையில், தங்கள் மகள் கொல்லப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளி கைது செய்யப்படாதது ஏன் என ஹர்ஷிதாவின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தன் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹர்ஷிதா பிரித்தானிய பொலிசில் புகாரளித்தும் பிரித்தானிய பொலிசார் குற்றவாளியை கோட்டைவிட்டுவிட்டார்கள்.
இதற்கிடையில், பங்கஜ் இந்தியாவிலிருப்பதாக தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ள ஹர்ஷிதாவின் பெற்றோர், அவருக்கு இந்திய பொலிசில் உறவினர்கள் இருப்பதாகவும், அதனால் இந்திய பொலிசார் அவரைக் காப்பாற்றிவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மார்ச் மாதம் பங்கஜ் இந்தியாவிலுள்ள தனது சொந்த கிராமமான Dharauli என்னுமிடத்தில், ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்கும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.

ஆனால், பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் ஹர்ஷிதாவின் பெற்றோர்.
இந்நிலையில், ஹர்ஷிதாவின் பெற்றோர் அளித்த வரதட்சணைப் புகாரின்பேரில் தாங்கள் பங்கஜின் குடும்பத்தினரை கைது செய்ததாகவும், தற்போது அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதகவும், பங்கஜை தொடர்ந்து தேடிவருவதாகவும் இந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, பிரித்தானிய பொலிசாரும் பங்கஜ் தொடர்பான விசாரணை தொடர்வதாகவும், அது விடயமாக தாங்கள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பங்கஜ் இந்தியாவில் சிக்கினால் அவரை பிரித்தானியா கொண்டுவருவதற்கான நோட்டீஸ் இந்திய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என கேட்டால் இருதரப்பினரிடமும் அதற்கான தெளிவான பதில் இல்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |